காசியாபாத்தில் பறவைகளுக்கு என்றே முதல் பறவை பிளாட் காலனி உருவகி வருகிறது!!
சிறிய பறவைகளுக்கு பாதுகாப்பான வாழ்விடத்தை வழங்குவதற்கான ஒரு தனித்துவமான முயற்சியாக, காசியாபாத் மேம்பாட்டு ஆணையம் (GDA) நகரில் துணைத் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் 60 அலகுகளை கொண்ட பறவை-பிளாட் ஒன்றை அமைத்தது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், பல மாடி பறவை பிளாட் இரும்பு கம்பத்தில் கட்டப்பட்டுள்ளது மற்றும் குடை வடிவ கவர் மூலம் பாதுகாக்கப்படுகிறது. இது பறவைகளுக்கான சிறிய வீடுகளைக் கொண்டுள்ளது. மேலும், GDA துணைத் தலைவரான காஞ்சன் வர்மா ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது; இயற்கையோடு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்களிடையே நெருக்கத்தை அதிகரிப்பதும் இதன் நோக்கமாகும்.
"பறவை-பிளாட் கட்டுவதற்கான எங்கள் நோக்கம் இயற்கையோடு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்களிடையே நெருக்கத்தை அதிகரிப்பதாகும். கட்டமைப்பின் விலை சுமார் ரூ.2 லட்சம் ஆகும். தனியார் கட்டடதாரர்கள் தங்கள் கட்டிடங்களில் இதுபோன்ற ஒரு கட்டமைப்பையாவது கட்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்," என வர்மா கூறினார்.
முதல் கட்டமைப்பு தோட்டத்தில் கட்டப்பட்டுள்ளது, இது பறவைகளுக்கான நீர்வளத்தைக் கொண்டுள்ளது. பறவைகளுக்கு உணவளிக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. பூனைகள் மற்றும் நாய்களிடமிருந்து பறவைகளைப் பாதுகாக்க இரும்பு கம்பத்தை அமைத்துள்ளோம், "என்று அவர் கூறினார். இது ஒரு பைலட் திட்டம் என்றும் விரைவில் மற்ற GDA வீட்டுத் திட்டங்களில் மேலும் புதிய கட்டமைப்புகள் வரும் என்றும் அதிகார துணைத் தலைவர் கூறினார்.