கோயம்புத்தூர்: சமுதாயத்தால், குறிப்பாக இளைய தலைமுறையினரால் திருநங்கைகள் ஏற்றுக்கொள்ள படவேண்டும் என்பதற்கான ஒரு முயற்சியாக கோவை தனியார் கல்லூரியை சேர்ந்த "யுகம்" என்னும் மாணவர்கள் குழு, திருநங்கைகளால் நடத்தப்படும் 'நடமாடும் உணவு டிரக்' ஒன்றை அறிமுகப்படுத்தியது.
குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி (KCT) வளாகத்தில் இன்று நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியினை கல்லூர நிர்வாக சார்பில் திரு. சங்கர் வனவராயர் மற்றும் ரோட்டரி கோயம்பத்தூர் மத்தியத் தலைவர் என். தாமோதரன் ஆகியோர் கொடியசைத்து துவங்கிவைத்தனர்.
இந்த உணவு டிரக் ஆனத 3 திருநங்கைகளால் இயக்கப்படுகிறது. இந்த 3 பேர் கொண்ட குழுவில் 15 வருட சமையல் அனுபவமுள்ள தஸ்நீம் (சமூக ஆர்வலர்), சுசித்ரா (இந்திய உணவு வகைகளில் பெயர் பெற்றவர்) மற்றும் யாமினி (நொருக்கு தீனிகள் தயாரிப்பாளர்) உள்ளனர்.
இந்த வாகனமானது கோவையின் பல கல்லூரிகளுக்கு, KCT மாணவர் குழுவுடன் இணைந்து சென்று மாணவர்களுக்கு உணவுகளை வழங்குகிறது. திருநங்கைகள் ஏற்றுக்கொள்ள படவேண்டியவர்கள் என்னும் என்னத்தினை மாணவர்களிடையே விதைக்கும் வேண்டும் என்பதே இப்பயணத்தின் நோக்கம் ஆகும்.
இந்த விழிப்புணர்வு பயணத்தில் பங்கேற்பதில் பெருமை கொள்வதாய் KCT கல்லூரி நிர்வாகமும், கோவை ரோட்டரி சங்கமும் தெரிவித்தனர்!