வருமான வரி கணக்கு: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முறை வருமான வரி செலுத்துவோருக்கு ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளார். இம்முறை, பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், நிதி அமைச்சர் வருமான வரியில் மாற்றங்களை அறிவித்திருந்தார். ஆனால், பழைய வரி விதிப்பின் கீழ் 6 வகையான விலக்குகளின் பலனை நீங்கள் பெறுவீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதனுடன், புதிய வரி விதிப்பில், ரூ. 7 லட்சம் வரையிலான வரி செலுத்தக்கூடிய (டெக்சபிள்) ஆண்டு வருமானத்தில் விலக்கின் பலனைப் பெறுகிறீர்கள்.
ரூ.33,800 சேமிக்கப்படும்
நிதியமைச்சர் மூலம் புதிய வருமான வரி விதிப்பின் கீழ் விலக்கு அதிகரிக்கப்பட்ட பிறகு, ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை வரி செலுத்துவோர் வரியில் ரூ.33,800 மிச்சப்படுத்துவார்கள்.
வருமான வரி நன்மைகள்
புதிய வரி விதிப்பில் சில நன்மைகள் உள்ளன. ஆனால் அதில் எந்த முதலீடுக்கும் விலக்கு இல்லை. இருப்பினும், புதிய வரி முறைக்கு நிலையான விலக்கு நிச்சயமாக சேர்க்கப்பட்டுள்ளது. மறுபுறம், நீங்கள் முதலீடு அல்லது பிற விலக்குகளை விரும்பினால், நீங்கள் பழைய வரி முறையின்படி வரி தாக்கல் செய்ய வேண்டும். பழைய வரி விதிப்பில் பல விலக்குகள் உள்ளன. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேலும் படிக்க | இன்றும் வெறும் 10 ரூபாயில் நீங்கள் இந்த 9 பொருட்களை வாங்க முடியும்!
பழைய வரி முறையில் இந்த விலக்குகள் கிடைக்கும்:
1. நிலையான விலக்கு: சம்பளம் பெறும் நபர்களுக்கு, ரூ. 50,000 விலக்கின் பலன் கிடைக்கும்.
2. பிரிவு 80 CCD (1B): NPS கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு ரூ. 50,000 வரை கூடுதல் விலக்கு கிடைக்கும்.
3. பிரிவு 80TTA: ஒரு தனிநபர் அல்லது HUF-க்கு, வங்கி, கூட்டுறவு சங்கம் அல்லது தபால் அலுவலகத்தின் சேமிப்புக் கணக்குகளில் இருந்து வரும் வட்டி வருமானத்தில் அதிகபட்சமாக ரூ. 10,000 வரையிலான விலக்கை இந்தப் பிரிவு வழங்குகிறது.
4. பிரிவு 80D: இது ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியத்தில் விலக்கை அனுமதிக்கிறது.
5. பிரிவு 80G: தகுதியுள்ள அறக்கட்டளைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நன்கொடைகள் விலக்கு பெற தகுதியுடையவை.
6. பிரிவு 80C: EPF & PPF, ELSS, ஆயுள் காப்பீட்டு பிரீமியம், கல்வி கட்டணம், வீட்டுக் கடன் செலுத்துதல், SSY, NSC மற்றும் SCSS ஆகியவற்றில் முதலீடு செய்து விலக்கு பெறலாம்.
தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் புதிய வரி விதிப்பின் கீழ் செயல்முறை இருக்கும்
வரி செலுத்துவோர் ஜூலை 31, 2023 -க்குள் தங்கள் வருமான வரியைச் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், நீங்கள் புதிய மற்றும் பழைய வரி விதிகளில் எதையும் தேர்ந்தெடுக்கவில்லை என்றால், உங்கள் TDS புதிய வரி முறையின் கீழ் கழிக்கப்படும்.
CBDT தகவல் அளித்தது
மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் சுற்றறிக்கையில் இந்த விஷயம் தெளிவாகியுள்ளது. அதில், "ஊழியர் அறிவிப்பை வழங்கவில்லை என்றால், ஊழியர் தொடர்ந்து இயல்புநிலை வரி விதிப்பில் இருப்பதாகவும், புதிய வரி முறையிலிருந்து விலகுவதற்கான விருப்பத்தை அவர் பயன்படுத்தவில்லை என்றும் கருதப்படும். அப்படிப்பட்ட சூழ்நிலையில், பிரிவு 115BAC இன் துணைப்பிரிவு (lA) கீழ் வழங்கப்பட்டுள்ள விகிதங்களின் படி, சட்டத்தின் பிரிவு 192 இன் கீழ், முதலாளி / நிறுவனம் வருமானத்தின் மீது வரியைக் கழிப்பார்கள்" .
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ