அறிவு முதிர்ச்சி இல்லாதவர்களை சமாளிக்க எளிய வழிகள்! ‘இதை’ பண்ணுங்க..

How To Handle Emotionally Immature People : பலர், எவ்வளவு வயதாகியிருந்தாலும் சில சமயங்களில் அறிவே இல்லாதது போல நடந்து கொள்வர். இப்படிப்பட்டவர்களை எப்படி சமாளிக்க வேண்டும் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Nov 2, 2024, 05:40 PM IST
  • அறிவு முதிர்ச்சி அற்றவர்களை எப்படி சமாளிப்பது?
  • அவர்களுக்கு ரிப்ளை செய்வது எப்படி?
  • ஈசியான டிப்ஸ், இதோ
அறிவு முதிர்ச்சி இல்லாதவர்களை சமாளிக்க எளிய வழிகள்! ‘இதை’ பண்ணுங்க.. title=

How To Handle Emotionally Immature People : மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருந்து விடுவதில்லை. ஒரு சிலர், 20 வயதிலேயே 40 வயது அறிவு முதிர்ச்சியுடன் நடந்து கொள்வர். ஒரு சிலர், 50 வயது ஆகியிருந்தாலும், 15 வயது குழந்தைக்கு இருக்கு முதிர்ச்சி கூட இல்லாமல் இருப்பர். இவர்களை போன்றோருடன் இருப்பது பெரிய கஷ்டம். அதிலும், இவர்களுடன் மிக மிக நெருங்கிய உறவில் இருப்பது அதைவிட சிரமம். அப்படிப்பட்டவர்களை சமாளிக்க சில டிப்ஸ், இதோ. 

எல்லைகள்:

எந்த உறவாக இருந்தாலும் அதற்கென்று தனியாக ஒரு எல்லைக்கோடு இருக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். அது காதல் உறவாக இருந்தாலும் சரி, பெற்றோருடனான உறவாக இருந்தாலும் சரி. எதுவாக இருப்பினும், அவர்கள் எந்த எல்லையில் இருக்க வேண்டும் என்பதை தெளிவாக அவர்களிடம் கூறிவிட வேண்டும். இது, உணர்வு ரீதியாக உங்களை நீங்கள் இழக்காமல் இருக்கவும், அவர்களுடன் நல்ல உறவை பேணவும் உதவும். 

அவர்கள் ரியாக்‌ஷன்கள் உங்களை பாதிக்க கூடாது:

நீங்கள் உங்களுக்குரிய விஷயங்கள் குறித்து அவர்களிடம் பேசும் போது, அவர்கள் அதற்கு எந்த மாதிரி ரியாக்ட் செய்தாலும் அது உங்களை பாதிக்காத மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படி, நீங்கள் உணர்வு ரீதியாக அவர்களுடன் ஒற்றுதல் இல்லாமல் இருந்தால், அவர்கள் உங்களை பற்றி என்ன நினைத்தாலும் உங்களுக்கு கவலை இருக்காது. இதனால், உங்கள் மனம் பாதிக்கப்படாமலும் நீங்கள் பார்த்துக்கொள்ளலாம். 

சமநிலை:

உணர்வு ரீதியாக முதிர்ச்சி பெறாத ஒருவரிடம் பேசும் போது, அவர்கள் பேசும்விஷயங்கள் உங்களை பற்றியதாக இருக்காது. அவை, அவர்களின் மனம் எப்படியிருக்கிறது என்பதை காண்பிப்பதாக இருக்கும். அதனால், அவர்கள் என்ன கூறினாலும், என்ன திட்டினாலும், அது அவர்களின் உள் மனதை காட்டுகிறது என நினைத்துக்கொண்டு எதுவும் பேசாமல் இருந்து விடுங்கள்.

எப்படி பேச வேண்டும் என்பதை தீர்மானித்துக்கொள்ளுங்கள்:

பிறரது குணாதிசயத்தை உங்களால் மாற்ற இயலாது. அவர் எப்படி இருக்கிறாரோ, அதை அப்படியே விட்டுவிட்டு நீங்கள் நிதானமாக எப்படி ஒரு பதிலை கொடுக்கலாம் என்பது குறித்து மட்டும் யோசனை செய்யுங்கள். எனவே, அவர்களுடன் உடல் அளவிலும் மனதளவிலும் குறிப்பிட்ட எல்லையை தீர்மானித்து அதற்குள்ளாகவே மரியாதையுடன் பேசி முடிக்க வேண்டும். எதையும் பர்சனல் ஆக எடுத்துக்கொண்டு கோபப்பட்டால் அது உங்களுக்கே ரிவீட் அடிக்கும்.

அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அது போல நடந்து கொள்ளுங்கள்:

பெரிதாக உணர்ச்சி முதிர்ச்சி இல்லாமல் இருப்பவர்களிடம் பேசும் போது, நிதானமாக இருக்கவும். அவர்கள் எந்த அளவிற்கு கோபப்பட்டாலும், எவ்வளவு உங்கள் கோபத்தை தூண்டும் அளவிற்கு பேசினாலும் அதை பொருட்படுத்தாமல் நிதானமாக பேச வேண்டும். அவர்களின் அந்த மாதிரியான குணம், அவர்களின் உள் மனதில் இருக்கும் போராட்டத்தை பிரதீபலிக்கிறது என்பதை உணருங்கள். எனவே, அவர்கள் நல்ல முறையில் உங்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் நீங்களும் அவர்களிடையே நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். 

மேலும் படிக்க | அழகாக இருப்பவர்கள் சிங்கிளாக இருப்பது ஏன்? 8 காரணங்கள்..

மேலும் படிக்க | உங்களை வார்த்தையால் அட்டாக் செய்பவரை சைலண்டா வாயை மூட வைக்கலாம்! 5 வழிகள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News