Indian Railways New rule For Confirmed tickets | ரயிலில் முன்பதிவு செய்த கன்பார்ம் டிக்கெட்டில் பயணிப்பதற்கு புதிய விதிமுறை ரயில்வே அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த விதிமுறையை நீங்கள் பயணம் செய்வதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஒருவேளை அந்த விதியை தெரியாமல் நீங்கள் பயணம் செய்தால் உங்கள் டிக்கெட் செல்லாததாக கருதப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படலாம் அல்லது ரயிலில் இருந்தும் நீங்கள் இறக்கிவிடப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த விஷயத்தில் ரயில் பயணியாக நீங்கள் கவனமாக இருப்பது அவசியம்.
ரயில் பயணிகளின் தவறு
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். இந்த பயணிகளுக்கு எந்த சிக்கலும் வராத வகையில் இந்திய ரயில்வே தினமும் ஆயிரக்கணக்கான ரயில்களை இயக்குகிறது. மக்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய விரும்பும் போது, ரயில் பயணத்தையே வசதியாக தேர்வு செய்கின்றனர். ஏனெனில் அது பல வசதிகளை வழங்குகிறது. டிக்கெட்டுகளும் விமானங்களை விட மலிவான விலையில் கிடைக்கிறது, அதிக தூரமும் குறைந்த செலவில் பயணிக்க முடியும். இதற்காகவே பெரும்பாலான மக்கள் ரயிலில் முன்பதிவு செய்து பயணிக்கின்றனர். ரயில் நிலையங்களுக்கு செல்லாமலேயே ஆன்லைனில் ரயில் டிக்கெட் புக்செய்து அதனை பிரின்ட் அவுட் எடுத்து வைத்தும் பயணிக்கிறார்கள். ஆனால், இ-டிக்கெட் வைத்திருப்பவர்கள் சில சமயங்களில் டிக்கெட்டை அல்லது அடையாள அட்டையை எடுத்துச் செல்ல மறந்துவிடுகின்றனர்.
மேலும் படிக்க | IRCTC ரயில் டிக்கெட் புக்கிங்கில் சலுகைகளை பெற... இந்த கிரெடிட் கார்டுகள் உதவும்
இ-ரயில் டிக்கெட் செல்லாது
ரயில்வே விதிகளின்படி, ஒரு பயணியிடம் இ-டிக்கெட் மற்றும் செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லையென்றால், அவர் பயணம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார், மேலும் TTE அவரை ரயிலில் இருந்து இறக்கலாம். எனவே, இ-டிக்கெட்டுடன் உங்கள் அடையாளச் சான்றினை எடுத்துச் செல்வது கட்டாயமாகும். உங்களிடம் அசல் ஐடி இல்லையென்றால், TTE உங்களுக்கு அபராதம் விதிக்கலாம். ரயிலில் இருந்தும் இறக்கலாம். எனவே, அடையாளச் சான்று இல்லாத இ-டிக்கெட்டுகள் அங்கீகரிக்கப்படாது என்பதை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம்.
ரயிலில் இருந்து இறக்கலாம்
இந்திய ரயில்வேயின் விதிகளின்படி, நீங்கள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து, உங்களின் அசல் அடையாளச் சான்றினை உங்களுடன் எடுத்துச் செல்லவில்லை என்றால், நீங்கள் டிக்கெட் இல்லாத பயணியாகக் கருதப்படுவீர்கள். அதேநேரத்தில் உங்களுக்கு ரயில்வே அபராதம் விதிக்க முடியாது, ஆனால் ரயிலில் இருந்து உங்களை வெளியேற்றவும் உரிமை உண்டு. உங்களிடம் உறுதியான டிக்கெட் இருந்தாலும், அடையாளச் சான்று இல்லாமல் அந்த டிக்கெட் பயனற்றது.
எவ்வளவு அபராதம் விதிக்கப்படும்?
உங்களிடம் அடையாளச் சான்று இல்லையென்றால், TT உங்களை டிக்கெட் இல்லாத பயணியாகக் கருதி அபராதம் விதிக்கலாம். உங்கள் பயண வகுப்பின் அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்படும். முதலில், TT உங்கள் டிக்கெட்டின் விலையை வசூலிப்பார். அதாவது நீங்கள் செல்லும் இடத்தை பொறுத்து அந்த தொகை இருக்கும். ஏசி போகியில் பயணித்தால் ரூ.440 அபராதமும், ஸ்லீப்பர் வகுப்பில் பயணம் செய்தால் ரூ.220 அபராதமும் செலுத்த வேண்டும். அபராதம் செலுத்தி சுகமாக பயணம் செய்யலாம் என நினைத்தால் அது தவறு. TT உங்கள் இ-டிக்கெட்டை ரத்து செய்யும் போது, உங்கள் இருக்கையும் ரத்து செய்யப்படும். இப்போது மீண்டும் அபராதம், டிக்கெட் பணம் கட்டினாலும் சீட் கிடைக்காது. TT உங்களுடன் உடன்படவில்லை என்றால், நீங்கள் ரயிலில் இருந்து இறங்குவதை தவிர வேறு வழியில்லை.
மூத்த குடிமக்களுக்கும் விதிகள்
மூத்த குடிமக்கள் தங்கள் வயதை நிரூபிக்கும் அடையாள அட்டையை வைத்திருப்பதும் முக்கியம். அவர்களிடம் அசல் ஐடி இல்லையென்றால், அவர்களின் இ-டிக்கெட் செல்லாததாகக் கருதப்படும். எனவே, ரயில் பயணத்தின் போது உங்கள் அடையாளச் சான்றினை இ-டிக்கெட்டுடன் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள், இதனால் பயணத்தின் போது நீங்கள் எந்த பிரச்சனையும் சந்திக்க வேண்டியதில்லை.
மேலும் படிக்க | ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்ற வேண்டுமா... UIDAI விதிகள் கூறுவது என்ன
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ