ஜியோவின் புதிய VR ஹெட்செட் அறிமுகம்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!

ஜியோ அறிமுகப்படுத்தியுள்ள VR ஹெட்செட்ஐபிஎல் 2023 போட்டிகளை மெய்நிகர் 100-இன்ச் திரையில் 360 டிகிரி ஸ்டேடியத்தின் பார்வையுடன் அனுபவிக்கும் மேம்பட்ட வசதியை வழங்குகிறது.  

Written by - RK Spark | Last Updated : May 6, 2023, 01:07 PM IST
  • 'ஜியோடைவ்' என்பது ஸ்மார்ட்ஃபோன் அடிப்படையிலான VR ஹெட்செட் ஆகும்.
  • ஜியோ விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) ஹெட்செட்டை 'ஜியோடைவ்' என்கிற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ஜியோடைவ் VR ஹெட்செட்டின் விலை ரூ. 1,299 ஆகும்.
ஜியோவின் புதிய VR ஹெட்செட் அறிமுகம்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ! title=

நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தனது முதல் விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) ஹெட்செட்டை 'ஜியோடைவ்' என்கிற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த சாதனம் ஐபிஎல் 2023 போட்டிகளை மெய்நிகர் 100-இன்ச் திரையில் 360 டிகிரி ஸ்டேடியத்தின் பார்வையுடன் அனுபவிக்கும் மேம்பட்ட வசதியை வழங்குகிறது.  இதில் ஐபிஎல் போட்டிகள் மட்டுமின்றி மற்ற வீடியோக்களையும் பார்க்க முடியும்.  'ஜியோடைவ்' என்பது ஸ்மார்ட்ஃபோன் அடிப்படையிலான VR ஹெட்செட் ஆகும், இது ஜியோ சினிமா செயலியுடன் சேர்ந்து வேலை செய்கிறது.  வெவ்வேறு கேமரா கோணங்கள் மற்றும் வெவ்வேறு மொழிகள் போன்ற அம்சங்களை இது பயனர்களுக்கு வழங்குகிறது.  இந்த புதிய VR ஹெட்செட், இனிவரும் காலங்களில் பல மேம்பட்ட வசதிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

மேலும் படிக்க | 8th Pay Commission அட்டகாசமான செய்தி: ஊழியர்களின் ஊதியம் 44% உயரும்

ஜியோடைவ் VR ஹெட்செட்டின் விலை ரூ. 1,299 ஆகும், இது கருப்பு நிறத்தில் கிடைக்கிறது.  விருப்பப்படும் பயனர்கள் இந்த ஹேடஸ்ட்டை ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது ஜியோமார்ட்டில் வாங்கி கொள்ளலாம்.  பேடியம் வாலட் மூலம் இந்த ஹெட்செட்டை ஆர்டர் செய்பவர்களுக்கு ஜியோ ரூ.500 கேஷ்பேக் சலுகையினை வழங்குகிறது.  கூடுதலாக, இந்த தளத்தில் குறைந்தபட்சம் ரூ.500க்கு பொருட்களை  வாங்கினால், ரூ.100 தள்ளுபடி பெறலாம்.  ஜியோடைவ் VR ஹெட்செட்டைப் பயன்படுத்த பயனர்களுக்கு ஜியோ இணைப்புடன் கூடிய ஸ்மார்ட்போன், 4.7 இன்ச் மற்றும் 6.7 இன்ச் இடையே காட்சி அளவு மற்றும் ஜியோடைவைப் பயன்படுத்த ஒரு கைரோஸ்கோப் மற்றும் ஆக்சலரோமீட்டர் போன்றவை தேவைப்படும். 

jio

ஜியோடைவ் உடன் பயனர்கள் தங்கள் மொபைல்களில் ஐபிஎல் 2023 போட்டியை பார்க்க, அவர்களது மொபைலில் 'JioImmerse' செயலியை டவுன்லோடு செய்து வைத்திருக்க வேண்டும்.  ஜியோடைவ் VR ஹெட்செட் ஆனது சாம்சங், ஆப்பிள், ஒன்ப்ளஸ், ஓப்போ, ரியல்மி, விவோ, சியோமி, போக்கோ, நோக்கியா போன்ற ஸ்மார்ட்போன்களில் நன்றாக வேலை செய்கிறது.  ஜியோவின் வாடிக்கையாளர்களுக்கென்றே பிரத்யேகமாக இந்த ஜியோடைவ் VR ஹெட்செட் கிடைக்கிறது.  இது ஜியோசினிமாவில், டாடா ஐபிஎல் பொடியை 100 அங்குல மெய்நிகர் திரையில் பார்க்க பயனர்களை அனுமதிக்கிறது.  ஹெட்செட் 4.7 மற்றும் 6.7 இன்ச் இடையே காட்சி அளவு மற்றும் ஆண்ட்ராய்டு 9 மற்றும் அதற்கு மேற்பட்ட அல்லது ஐஓஎஸ் 15 மற்றும் அதற்கு மேற்பட்டவற்றின் இணக்கமான ஓஎஸ் பதிப்புடன் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்களை ஆதரிக்கிறது.  சிறப்பான முறையில் படத்தை பார்க்கவும், ஆப்டிகல் வசதிக்காகவும்  சென்டர் மற்றும் பக்கத்தில் லென்ஸ்கள் பொருத்தப்பட்டுள்ளது.  ஜியோடைவை எப்படி பயன்படுத்துவது என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.  

- ஹெட்செட் பெட்டியில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும்.

- ஸ்கேன் செய்த பிறகு, மொபைலில் JioImmerse செயலியை டவுன்லோடு செய்வதன் மூலம் ஜியோடைவை பயன்படுத்தி கொள்ளலாம்.

- ஜியோ 4ஜி, 5ஜி அல்லது ஜியோ பைபர் நெட்வொர்க்குடன் இணைக்க வேண்டும்.

- அடுத்ததாக பயன்பாட்டில் லாக் இன் செய்ய வேண்டும். 

- அதைத் தொடர்ந்து, பயன்பாட்டில் உள்ள ஜியோடைவ் என்பதன் கீழ் "Watch on JioDive" எனும் ஆப்ஷனை தேர்வு செய்யவேண்டும்.

- அதன்பின்னர் கிளிப் மற்றும் லென்ஸ்கள் இடையே ஹெட்செட்டில் மொபைலை வைக்க வேண்டும்.

- இறுதியாக, பயனர்கள் ஒரு வசதியான மற்றும் தெளிவான பார்வைக்கு ஸ்ட்ராப்ஸ் மற்றும் படத்தின் குவாலிட்டியை சரிசெய்யலாம்.

மேலும் படிக்க | EPFO மிகப்பெரிய அப்டேட்: அதிகரிக்கிறது குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News