தலைமுடிக்கு கண்டிஷனரை பயன்படுத்தும்போது செய்யும் பொதுவான தவறுகள்....

கண்டிஷனரைப் பயன்படுத்தும்  போது பல பெண்கள் சில பொதுவான தவறுகளை செய்கின்றனர். இதனால், தலை முடிக்கு நன்மை ஏற்படுவதற்கு பதிலாக பாதிப்பு  ஏற்படும். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 6, 2021, 03:11 PM IST
  • கண்டிஷனரைப் பயன்படுத்துவதன் மூலம், முடி ஆரோக்கியமாகவும் மென்மையாகவும் மாறும்.
  • தவறான பயன்பாட்டினால் தலைமுடியில் பிசுபிசுப்பு ஏற்பட்டு, முடி பாதிக்கப்படும்.
  • தலைமுடி மெல்லியதாக இருந்தால் லேசான கண்டிஷனரைப் பயன்படுத்த வேண்டும்.
தலைமுடிக்கு கண்டிஷனரை  பயன்படுத்தும்போது செய்யும் பொதுவான தவறுகள்.... title=

கண்டிஷனர்களை பயன்படுத்துவதால் முடி மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும் என்பது உண்மை தான். சிலருக் முடி மிகவும் கடினமானதாகவும், வறண்டு போயும், பளபளப்பு இல்லாமலும் காணப்படும். அது போன்றவர்கள் கண்டிஷனரை பயன்படுத்தினால், முடி மென்மையாக இருக்கும்.

கண்டிஷனரைப் பயன்படுத்தும்  போது பல பெண்கள் சில பொதுவான தவறுகளை செய்கின்றனர். இதனால், தலை முடிக்கு நன்மை ஏற்படுவதற்கு பதிலாக பாதிப்பு  ஏற்படும். அதனால், கண்டிஷனரை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ளலாம்

அதிகப்படியான கண்டிஷனரைப் பயன்படுத்த வேண்டாம் - கண்டிஷனரைப் பயன்படுத்துவதன் மூலம், முடி ஆரோக்கியமாகவும் மென்மையாகவும் மாறும் என்பது உண்மை தான் என்றாலும், அதை அளவிற்கு அதிகமாகப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். இதனால்,  உங்கள் தலைமுடியில் பிசுபிசுப்பு ஏற்பட்டு, முடி பாதிக்கப்படும். 

உங்கள் முடி வகைக்கு ஏற்ப கண்டிஷனரைப் பயன்படுத்துங்கள் - உங்கள் தலைமுடி மெல்லியதாக இருந்தால் லேசான கண்டிஷனரைப் பயன்படுத்த வேண்டும். அதே நேரத்தில், மெல்லிய கூந்தலில் அதிக கண்டிஷனர் போட்டால் அது உங்கள் தலைமுடியைக் கெடுக்கும். எனவே, கூந்தலுக்கு ஏற்ப கண்டிஷனரைப் பயன்படுத்துங்கள்.

கண்டிஷனரைப் பயன்படுத்திய உடனேயே கழுவ வேண்டாம் - சில பெண்கள் கண்டிஷனரைப் பயன்படுத்திய உடனேயே தலைமுடியைக் கழுவி விடுகிறார்கள், அவ்வாறு செய்தால் பலன் இல்லாமல் போய் விடும். கண்டிஷனரைப் பயன்படுத்திய பிறகு, அதை 4 முதல் 5 நிமிடங்கள் வரை தலைமுடியில் ஊற விட்டு கழுவவும். இதனால் முடி பளபளப்பாக இருக்கும்.

கூந்தலை உலர விடும் முறை - உங்கள் தலைமுடியை ஒரு துண்டினால் தேய்த்துக் காயவைக்காதீர்கள். அப்படி செய்தால், கண்டிஷனர் போடுவதால் எந்த பயனும் இருக்காது, மேலும் முடி கொட்டுவது தான் அதிகமாகும். மேலும் ட்ரையரினால், அதிகமாக ப்ளோ செய்து உலர வைப்பதையும் தவிர்க்கவும், இது முடி பளபளப்பு கெடுவதால்,  கண்டிஷனரின் ஊட்டச்சத்தை கூந்தலுக்கு கிடைக்காமல் போய்விடும்.

ALSO READ | என்ன செய்தாலும் தொப்பை குறையவில்லையா; சுரைக்காய் ஜூஸ் குடித்தால் போதும்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News