பற்களில் மஞ்சள் கறை போக... இந்த 3 பழங்களும் நல்லா வேலை செய்யும் - என்னென்னு பாருங்க!

Tips To Remove Stain In Teeth: நமக்கு எளிதாக கிடைக்கும் இந்த 3 பழங்களை சாப்பிட்டாலே உங்களின் பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கும்.

Written by - Sudharsan G | Last Updated : Jul 11, 2024, 02:09 PM IST
  • பற்களில் மஞ்சள் கறை ஈருகளையும் பாதிக்கலாம்.
  • இதனால் பலரும் தன்னம்பிக்கையை குறைத்துக்கொள்கின்றனர்.
  • இதற்கென வீட்டு வைத்தியங்களும் உள்ளன.
பற்களில் மஞ்சள் கறை போக... இந்த 3 பழங்களும் நல்லா வேலை செய்யும் - என்னென்னு பாருங்க! title=

 

 

 

பற்களில் மஞ்சள் கறை ஈருகளையும் பாதிக்கலாம்.

இதனால் பலரும் தன்னம்பிக்கையை குறைத்துக்கொள்கின்றனர்.

இதற்கென வீட்டு வைத்தியங்களும் உள்ளன. 

Tips To Remove Stain In Teeth: நமது உடலில் ஒவ்வொரு உறுப்புகளும் நலமாக இருந்தால்தான் ஒட்டுமொத்த உடல்நலனும் சீராக இருக்கிறது என அர்த்தம் எனலாம். உதாரணத்திற்கு வாயில் புண் வந்தால் உங்கள் வயிறில் பிரச்னை இருக்கலாம். எனவே, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்திருப்பதே சிறந்ததாகும். எதையும் உதாசீனப்படுத்தக் கூடாது. 

அந்த வகையில், பல் மஞ்சள் கறையுடன் இருப்பதும் ஒரு விதத்தில் பிரச்னை என சொல்லப்படுகிறது. மஞ்சள் கறை பற்களில் அதிகமானால் ஈறுகளிலும், பற்களிலும் பாதிப்புகள் ஏற்படலாம். உடல்நலத்தில் மனநலத்திலும் இது பாதிப்பை ஏற்படுத்தலாம். அழகான பற்கள் தெரியும் வெண்சிரிப்புதான் பலராலும் விரும்பப்படும் ஒன்று. 

ஒருவேளை பற்களில் மஞ்சள் கறைகள் இருந்தால் ஒருவர் அவரின் நம்பிக்கையே குறைந்துவிடும். அந்த வகையில், மஞ்சள் கறைகளை போக்க இந்த சில பழங்களும் நன்மை செய்யும் எனலாம். அது எப்படி பழங்களால் மஞ்சள் கறை நீங்கும் என நீங்கள் கேட்பது எனக்கும் புரிகிறது. வாருங்கள் அதுகுறித்தும், அதேபோல் உங்கள் வீட்டு அடுப்பாங்கறையில் இருக்கும் இன்னும் சில பொருள்கள் எப்படி உங்களின் மஞ்சள் கறை பிரச்னைக்கு தீர்வாக அமையும் என்பதையும் சற்றே விரிவாக காணலாம். 

zeenews.india.com/tamil/photo-gallery/follow-these-five-things-to-maintain-strong-healthy-teeth-home-remedies-495723

மேலும் படிக்க | காலையில் பல் துலக்கும் போது இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம்!
zeenews.india.com/tamil/lifestyle/best-time-to-brush-your-teeth-morning-or-night-do-not-do-these-mistakes-while-brushing-509553

இதில் பழங்களை எடுத்துக்கொண்டோமானால் தர்பூசணி, பப்பாயா, ஸ்ட்ராபெரீஸ் ஆகியவை மஞ்சள் கறையை நீக்கும் தன்மையை கொண்டிருக்கிறது. காரணம், இதில் உள்ள மாலிக் அமிலம் என்பது மென்மையான பிலீசிங் ஏஜென்ட் ஆகும். இது பற்களின் மேற்புறத்தில் படிந்திருக்கும் கறைகளை நீக்க உதவும். மேலும் இந்த பழங்கள் எச்சிலை அதிகமாக ஊறவைக்கும். இதன்மூலம், வாய்களில் தங்கியிருக்கும் உணவுப் படிமங்கள் மற்றும் கிருமிகள் சுத்தமாகவும், இவைதான் பற்கள் மஞ்சளாக முதன்மையான காரணிகளாகும். 

ஆனால், வெறும் பழங்களை சாப்பிட்டால் மட்டும் நன்மைகள் கிடைக்காது. பற்களில் கற்களை ஏற்படுத்தும் காப்பி உள்ளிட்ட உணவுகளை முடிந்தளவு குறைத்தால் மட்டுமே முழு பலன்கள் கிடைக்கும் எனலாம். இருப்பினும் வீட்டு வைத்தியங்கள் கைக்கொடுக்கும் என்றாலும் அதையே முழுவதுமாக சார்ந்திருப்பதும் பிரச்னையை ஏற்படுத்தலாம். பேக்கிங் சோடா, சார்க்கோல், எலுமிச்சை சாறு ஆகியவை பற்களின் கறையை நீக்க அதிகம் பயன்படுத்தப்படும் ஒன்றாகும். இவை சரியாக பயன்படுத்தாவிட்டால் எனாமலில் பாதிப்பு உண்டாகும். எனவே, நீண்ட கால தேவைக்கு பல் மருத்துவரை நாடுவதே சிறந்தது. 

அது ஒருபுறம், இருக்க தினமும் இரண்டு வேளை மிதமான வேகத்தில் பல் துலக்குவதும், சாப்பிட்ட பின் நன்கு வாய் கொப்பளிக்கவும். காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடவும். இயற்கையாகவே இது உங்கள் பற்களை சுத்தமாக வைக்க உதவும். குறைவான அளவில் பற்களில் மஞ்சள் கறைகள் இருந்தால் மருத்துவரை ஆலோசித்து சில இயற்கையான வைட்னிங் முறைகளை பின்பற்றலாம். 

மேலும் பற்களில் கறை படிந்திருப்பதால் தன்னம்பிக்கையை குறைத்துக்கொள்ளக் கூடாது. அதில் இருந்து மீளும் வழியினை பார்க்கலாமே ஒழிய மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகக் கூடாது. மற்றவர்கள் என்ன சொல்வார்கள், நினைப்பார்கள் ஆகியவற்றை எண்ணி அன்றாட வாழ்வை சிக்கலுக்கு உள்ளாக்குவது எவ்வித தீர்வை தராது. எனவே, பற்களில் கறைகளை நீக்க அதற்கான வழிமுறைகளை பின்பற்றுங்கள், அது தீர்வை எட்டுகிறதோ இல்லையோ வாழ்வில் நாம் சந்திக்க வேண்டியவை பல விஷயங்கள் இருக்கிறது என்பதையும் மனதில் வையுங்கள்.

(பொறுப்பு துறப்பு: பற்களின் மஞ்சள் கறையை நீக்குவதற்கு இங்கு கொடுக்கப்பட்டவை வீட்டு வைத்தியங்கள் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. இதனை பின்பற்றும் முன் நிச்சயம் பல் மருத்துவரை ஆலோசிக்கவும். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | மஞ்சள் மஞ்சளா பற்கள் இருக்கா? அப்போ உடனே இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க
zeenews.india.com/tamil/lifestyle/how-to-get-rid-of-yellow-teeth-natural-ways-to-remove-plaque-498639

Trending News