ஓடிசாவில் ஃபானி புயலில் பிறந்த குழந்தைக்கு பெண் ஃபானி என பெயர்!!

ஓடிசாவில் ஃபானி புயலின் போது பிறந்த குழந்தைக்கு பெண் ஃபானி என பெயர் சூட்டியுள்ளனர்!!

Last Updated : May 4, 2019, 11:38 AM IST
ஓடிசாவில் ஃபானி புயலில் பிறந்த குழந்தைக்கு பெண் ஃபானி என பெயர்!! title=

ஓடிசாவில் ஃபானி புயலின் போது பிறந்த குழந்தைக்கு பெண் ஃபானி என பெயர் சூட்டியுள்ளனர்!!

வங்க கடலில் உருவான ஃபானி புயல் சூறாவளியாக மாறி நேற்று (வெள்ளிக்கிழமை) காலை ஒடிசா கடற்கரையை கடக்க துவங்கியது. காற்றின் வேகம் மணிக்கு 200 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் ஒடிசாவை தாக்கியது. இதில் பல மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்துள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. புயலால் ஏற்பட்ட விபத்துகளில் 3 பேர் பலியாகினர். பல பகுதிகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் கோரத்தாண்டவம் ஆடிய ஃபானி புயல் நேற்று நள்ளிரவு மேற்கு வங்க மாநிலத்தை கடந்தது. 

இந்நிலையில், ஒடிசா கடற்பகுதியில் நேற்று புயல் தாக்கியபோது தலைநகர் புவனேஸ்வர் அருகேயுள்ள மான்செஷ்வாரில் உள்ள ரயில்வே மருத்துவமனையும் சேதமடைந்தது. 

காலை சுமார் 11.03 மணியளவில் அங்குள்ள ரயில் பெட்டி சீரமைக்கும் பணிமனையில் வேலை செய்யும் உதவியாளரின் மனைவிக்கு ரயில்வே மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையும் தாயும் நலமாக உள்ளனர்.  பானி புயல் தாக்கியபோது பிறந்த அந்த குழந்தையை `பெண் ஃபானி’ என டாக்டர்கள் அழைக்கின்றனர்.  அந்த தாய்க்கு பிறந்த முதல் குழந்தை இது.  புயல் தாக்கியதில் மருத்துவமனை சேதமடைந்த நிலையில் கூட தாய்க்கும் சேய்க்கும் எந்த பாதிப்பும் இல்லை. 

ஃபானி என்றால் பாம்பு அல்லது பாம்பு உடை என்பது பொருளாம்.  இந்த வார்த்தையை வங்கதேசம் உருவாக்கியதாக இந்திய வானிலைத் துறை கூடுதல் இயக்குனர் மிருன்செய் முகப்பத்ரா தெரிவித்துள்ளார். 

 

Trending News