Budget 2025: புதிய வருமான வரிச் சட்டம் எப்போது? பட்ஜெட் உரையில் இதை கவனித்தீர்களா?

Budget 2025: புதிய வருமான வரிச் சட்டம் முதல் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே அதாவது பிப். 13ஆம் தேதிக்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Feb 3, 2025, 06:39 PM IST
  • பிப். 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்
  • பிப்.13ஆம் தேதி வரை முதல் கட்ட கூட்டத்தொடர் நடைபெறுகிறது.
  • மார்ச் 10ஆம் தேதி அடுத்த கட்ட கூட்டத்தொடர் தொடக்கம்.
Budget 2025: புதிய வருமான வரிச் சட்டம் எப்போது? பட்ஜெட் உரையில் இதை கவனித்தீர்களா? title=

Budget 2025 Key Highlights: கடந்த பிப். 1ஆம் தேதி 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இருந்தாலும், இனி வருடத்திற்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் வருமான வரி செலுத்த வேண்டாம் என்பதுதான் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. 

புதிய வரி முறைக்கான வருமான வரி அடுக்குகளும் அறிவிக்கப்பட்டது. அதாவது, 12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வரி இல்லை. அதேபோல், நிலையான கழிவுத்தொகை ரூ.75 ஆயிரத்தையும் சேர்த்து ரூ.12,75,000 மேல் வருமானம் பெறுபவர்களுக்கு இந்த அடுக்குகளின் கீழ் வரி வசூலிக்கப்படும். இவர்களுக்கு முதல் ரூ. 4 லட்சம் வரை வரி இல்லை.

பட்ஜெட் 2025: புதிய வருமான வரி அடுக்கு

ரூ. 4-8 லட்சம் வரை 5% வரி, ரூ. 8-12 லட்சம் வரை 10% வரி, ரூ. 12-16 லட்சம் வரை 15% வரி, ரூ. 16-20 லட்சம் வரை 20%, ரூ. 20-24 லட்சம் வரை 25%, ரூ.24 லட்சம் முதல் 30%க்கு மேல் வருமான வரி செலுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, புதிய வருமான வரிச் சட்ட மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்  எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க | மத்திய பட்ஜெட் 2025: எந்தெந்த பொருட்களின் விலை உயர்கிறது, குறைகிறது.. லிஸ்ட் இதோ

பட்ஜெட் 2025: இரண்டு கட்டமாக நடக்கும் கூட்டத்தொடர்

வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. ஜன. 31ஆம் தேதி தொடங்கிய முதல் கட்டம், வரும் பிப். 13ஆம் தேதி வரை இருக்கும். அதற்கு பின் மார்ச் 10ஆம் தேதி தொடங்கும் இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 10ஆம் தேதி தொடங்கி ஏப்.4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அந்த வகையில், இந்த புதிய வருமான வரிச் சட்டம் முதல் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் 2025: முக்கிய அம்சங்கள்

இந்த புதிய வருமான வரிச் சட்டம் என்பது பழைய சட்டத்தின் ஷரத்துகள் 50% அளவில் இருக்கும் என்றும் வருமான வரியை எளிமைப்படுத்தும் நோக்கிலேயே புதிய சட்டம் கொண்டுவரப்படுவதாகவும் அவர் பட்ஜெட் உரையின்போது தெரிவித்தார். இந்நிலையில், இந்த பட்ஜெட்டில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.  

- வரி செலுத்துதலை எளிதாக்குவதற்காக ஐந்து 'விவாத் சே விஸ்வாஸ்' திட்டங்களை அரசாங்கம் முன்னர் செயல்படுத்தி இருந்தது. நிலுவையில் உள்ள வரி சார்ந்த பிரச்னைகளை குறைந்த தொகையில் தீர்த்துக்கொள்ள வரி செலுத்துவோருக்கு இந்த விவாத் சே விஸ்வாஸ் வாய்ப்பளிக்கிறது. மேலும்,  விரைவான வரி ரிட்டர்ன்ஸ், முகமற்ற மதிப்பீடுகள் ஆகியவையு் வரி செலுத்துதலை எளிமையாக்குவதற்கு அரசு செயல்படுத்தியிருந்தது.

மேலும் படிக்க | Budget 2025: நிர்மலா சீதாராமன் சேலையில் சொன்ன செய்தி... பின்னணியில் பீகார் - என்ன விஷயம்?

- சர்வதேச வர்த்தகத்திற்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு உருவாக்கப்படும். அதாவது இதன்மூலம் உலகளாவிய விநியோக சங்கிலிகளில் இந்தியாவின் ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும், நிதி சார்ந்த தீர்வுகளை ஏற்படுத்தவும், இது உதவும். 

- உலகளாவிய வர்த்தகத்தை அதிகரிக்க துறைசார் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் இலக்குகளுடன் இணைந்து 'ஏற்றுமதி ஊக்குவிப்பு மிஷன்' தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் ஏற்றுமதி அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்றுமதி அதிகரித்தால் நாட்டின் அந்நிய செலவாணி அதிகிரிக்கும். 

- நிறுவனங்களின் இணைப்புகளுக்கு விரைவான ஒப்புதல்கள் கிடைக்கும் என உறுதி செய்யப்படலாம் செயல்முறையை நெறிப்படுத்த தொடர்புடைய விதிமுறைகளின் விரிவாக்கமும் செய்யப்பட உள்ளது. 

- வணிக செய்வதை எளிமையாக்க, அரசுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே நட்பு ரீதியிலான கொள்கைகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் நவீன, நம்பிக்கை அடிப்படையிலான ஒழுங்குமுறை கட்டமைப்பிற்கு உறுதிபூண்டுள்ளது.

- காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய முதலீட்டை அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இது 74% ஆக உள்ளது.

- வணிக விரிவாக்கத்தை ஊக்குவிக்க இந்த ஆண்டு ஒரு புதிய மாநில வாரியான முதலீட்டு நட்பு குறியீடு தொடங்கப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 

- 100 நூற்றுக்கும் மேற்பட்ட விதிகளை குற்றமற்றதாக்கவும், இந்தியாவின் முதலீட்டு சூழலை மேலும் மேம்படுத்தவும் அரசாங்கம் இந்த புதிய வருமான வரிச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் அறிமுகப்படுத்தும்.

மேலும் படிக்க | Budget 2025: கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட்... நிபுணர் சொன்ன கருத்து

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News