நடிகர் அஜித்குமார் என்றாலே திரையரங்குகள் விழா கோலமாக காணப்படுவது வழக்கம். இந்த நிலையில், அவரது நடிப்பில் வரும் 6ஆம் தேதி வெளியாக உள்ளது விடாமுயற்சி திரைப்படம்.
தள்ளிப்போன ரிலீஸ் தேதி: பெங்களுக்கே வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், திடீரென ஆங்கில புத்தாண்டு அன்று ரிலீஸ் தேதியை மாற்றி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்தனர். ஆனால் சிறிது நாட்களிலேயே அஜித் குமார் துபாயில் நடந்த கார் ரேஷில் 3வது இடம் பிடித்து படம் ரிலீஸாகாத கவலையை மறக்க வைத்தார்.
அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது மற்ற ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் விடாமுயற்சி படத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் இருந்து வெளியான சவதீகா பாடல் படித் தொட்டி எங்கு நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வரும் 6ஆம் தேதி வெளியாக உள்ளது.
மேலும் படிங்க: விடாமுயற்சி படத்தால் ரிலீஸ் தேதி தள்ளிப்போன திரைப்படங்கள்.. என்னென்ன தெரியுமா?
இந்த நிலையில், இப்படத்தில் ப்ரீ புக்கிங் தொடங்கி உள்ளது. இதுவரை வெளிநாடுகளில் மட்டுமே இப்படத்தின் ப்ரீ புக்கிங், நேற்றில் இருந்து தமிழகத்திலும் தொடங்கி உள்ளது. பலரும் போட்டிப்போட்டுக்கொண்டு டிக்கெட்களை வாங்கி வருகின்றனர்.
இதனை கோடி வசூலா?
இதுவரையில் தமிழ்நாட்டில் மட்டும் ப்ரீ புக்கிங்கில் மட்டும் விடாமுயற்சி படம் ரூ.3 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். மேலும், வெளிநாடுகளில் ரூ. 3.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ப்ரேக்டவுன் திரைப்படத்தின் ரீமேக்கா?
விடாமுயற்சி திரைப்படம் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் வில்லனாக அர்ஜுன் மற்றும் அவருக்கு இணையாக நெகடிவான கதாபாத்திரத்தில் ரெஜினா கசாண்ட்ரா ஆகியோரும் நடித்துள்ளனர்.
மேலும் ஆரவ், ரம்யா உள்ளிட்டோரும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளனர். மேலும் இப்படம் 1997ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ப்ரேக்டவுன் திரைப்படத்தை தழுவி எடுக்கப்படதாக கூறப்படுகிறது. இது உண்மையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் படிங்க: மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி நடித்த ஆர்பிஎம் படம்! மோஷன் போஸ்டர் வெளியானது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ