தவறான உணவுப் பழக்கம், உடல் உழைப்பு இல்லாத நிலை, மன அழுத்தம் போன்ற காரணங்களால், பெரும்பாலான ஆண்கள் பாலியல் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். விந்தணு எண்ணிக்கை மற்றும் தரம் குறைவாக இருந்தால் ஆண்மைக்குறைவு அபாயம் அதிகரிக்கிறது. இந்நிலையில், ஆண்மை குறைபாடு, விந்தணு பிரச்சனை, பாலியல் பிரச்சனை ஆகியவற்றில் இருந்து நிரந்தரமாக விடுபட சில உணவுகளை டயட்டில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளவது பலன் தரும்.
திருமணத்திற்குப் பிறகு ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கை ஆண்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பாலியல் செயல்திறனை அதிகர்க்க உதவும் உணவுகள் குறித்து இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வாட்ஸ், (Health Tips) கூறுவதை அறிந்து கொள்ளலாம். இந்த உணவுகள் பாலியல் பிரச்சனையை தீர்க்கும் ஒரு சஞ்சீவி என்று கூறலாம்.
ஆண்மை குறைபாடு, பாலியல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவும் சில உணவுகள்
பழங்கள் (Fruits)
பழங்களை அதிக அளவில் உட்கொள்வதன் மூலம் விறைப்புத்தன்மை பிரச்சனை அபாயத்தை 14% குறைக்கலாம் என்பது பல ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், சில பழங்களில் அதிக ஃபிளாவனாய்டுகள் காணப்படுகின்றன. பெர்ரி, திராட்சை, ஆப்பிள் மற்றும் சிட்ரஸ் பழங்கள் போன்ற பழங்களில் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. தர்பூசணி விறைப்புத்தன்மையை மேம்படுத்துவதோடு, உங்கள் லிபிடோவை அதிகரிக்கவும் முடியும், ஏனெனில் இதில் சிட்ரூலின் உள்ளது, இது உடலில் அர்ஜினைன் போன்ற அமினோ அமிலங்களை வெளியிடுகிறது. வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் விந்தணுக்களின் எண்ணிக்கை, தரம் இரண்டும் அதிகரிக்கும்.
கீரை (Spinach)
கீரையில் ஃபோலேட் என்ற வைட்டமின் உள்ளது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, விறைப்புத்தன்மை பிரச்சனையை நீக்குகிறது, விந்தணு, ஆண்மை பிரச்சனை உள்ள ஆண்கள் இதனை எடுத்துக் கொள்வதால், அவர்களின் பாலியல் ஆரோக்கியம் மேம்படும். கீரை டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவை அதிகரிக்கிறது. இது பாலியல் ஆரோக்கியத்திற்கான முக்கிய ஹார்மோன் ஆகும்.
நட்ஸ் வகைகள் (Nuts)
பாதாம், வாதுமை பருப்புகள், முந்திரி, வேர்க்கடலை போன்ற அனைத்து வகையான நட்ஸ் வகைகளிலும் துத்தநாகம் மற்றும் அர்ஜினைன் நிறைந்துள்ளது. உலர் பழங்களில், வாதுமை பருப்பு மிகவும் நன்மை பயக்கும், ஏனெனில் அவை ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. கூடுதலாக, வாதுமை பருப்புகள் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தும். பூசணி விதையும் ஆண்களுக்கு ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் அற்புத உணவு.
மேலும் படிக்க | வெறும் 5 நிமிட உடற்பயிற்சி போதும்... ஒரே மாதத்தில் தொப்பை எல்லாம் மாயமாய் மறையும்
காபி (Coffee)
ஒரு கப் காபியில் இருக்கும் காஃபின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். காபியை வழக்கமாக உட்கொள்வதுவிந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதை தடுக்கிறது. ஆனால் அதை அதிகமாக உட்கொள்வது, எதிர்மறை பாதிப்பை ஏற்படுத்தி, பாலியல் செயல்திறனை பாதிக்கலாம். ஏனெனில், காபியை அதிகமாக உட்கொள்வதால் நீரிழப்பு ஏற்படுகிறது. இது சோர்வு, வறட்சி மற்றும் பிற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே, ஒரு நாளைக்கு ஒன்று முதல் மூன்று கப் காபிக்கு மேல் உட்கொள்ள வேண்டாம்.
இறைச்சி (Meat)
பெரும்பாலான இறைச்சியில் துத்தநாகம், கார்னைடைன் மற்றும் அர்ஜினைன் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன. மேலும், இறைச்சி அதிக அமினோ அமிலம் கொண்ட புரதம் நிறைந்த உணவாகும். விறைப்புத் தன்மை பிரச்சனையில் இருந்து விடுபட இது உதவும் என்பது பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனினும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் கூடாது என்பதை நினைவில் கொள்ளவும்
டார்க் சாக்லேட் (Dark Chocolate)
டார்க் சாக்லேட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதைத் தவிர, இதய ஆரோக்கியத்திற்கும் இது மிகவும் நன்மை பயக்கும். அதே நேரத்தில் ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் திறன் கொண்டதால், இது உங்கள் உதவும். இதில் உள்ள ஃபிளவனால்கள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. இது ஆண்களுக்கு விறைப்புத்தன்மையில் இருந்து விடுபட உதவுகிறது. இதற்கு குறைந்த பட்சம் 60 சதவீதம் கோகோவால் செய்யப்பட்ட டார்க் சாக்லேட் சாப்பிடுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | எச்சரிக்கை மெல்லக் கொல்லும் பிபி... கட்டுக்குள் வைக்க உதவும் சில பயிற்சிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ