Aadhar Rules | ஆதார் விவரங்களை பயன்படுத்துவதில் மிகப்பெரிய திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. அதன்படி ஆதார் விவரங்களை தனியார் நிறுவனங்களும் அணுகும் வகையில் ஆதார் விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வந்து அதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. ஆன்லைன் வர்த்தகம், சுற்றுலா மற்றும் மருத்துவம் உள்ளிட்ட சேவைகளை மக்கள் தடையின்றி பயன்படுத்தும் வகையில் இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டிருப்பதாக மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆதார் பாதுகாப்பு
நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடிமக்களுக்கு 12 இலக்க எண்ணுடன் ஆதார் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் குடிமக்களின் கைரேகை, கருவிழி உள்ளிட்ட விவரங்கள் அடங்கியிருக்கும். இதன் மூலம் ஒருவரின் அடையாளத்தை எளிதாக உறுதி செய்ய முடியும். இந்த கார்டு அரசின் சேவைகளை பெறுவதற்கும், மோசடியாளர்களை அவர்களின் கருவிழி, கைரேகை உள்ளிட்டவை மூலம் எளிதாக அடையாளம் காணவும் பயன்படுகிறது. அதேநேரத்தில் குடிமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் மட்டுமே ஆதார் விவரங்களை இதுவரை அணுகும் வகையில் விதிமுறைகள் இருந்தன. தனியார் நிறுவனங்களும் இதனை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தபோதும் அதனை உச்சநீதிமன்றம் தடை செய்தது
ஆதார் விதிமுறைகளில் மாற்றம்
இப்போது மீண்டும் ஆதார் விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது மத்திய அரசு. இதன்மூலம் தனியார் நிறுவனங்கள் குடிமக்களின் ஆதார் விவரங்களை அணுக முடியும். ஆனால் சுற்றுலா, மருத்துவம், ஆன்லைன் வர்த்தகம் ஆகியவற்றில் ஈடுபடும் நிறுவனங்கள் ஆதார் தகவல்களை அணுகுவதற்கு தேவையான காரணத்தை கூறி மத்திய தகவல் தொழில் நுட்பதுறையிடம் விண்ணப்பிக்க வேண்டும். அந்த அமைச்சகம் MeitY, விண்ணப்பித்திருக்கும் நிறுவனம் குறித்தும், ஆதார் அணுகலை வழங்குவது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கும். தகவல் தொழில்நுட்ப துறை அமைசக்கம் அனுமதி கொடுத்தால் மட்டுமே தனியார் நிறுவனங்கள் ஆதார் விவரங்களை அணுக முடியும்.
ஆதார் விதிமுறை திருத்தம் எதிர்ப்பு
இருப்பினும் இந்த விதிமுறை திருத்தம் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டதற்கு மூத்த வழக்கறிஞர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் ஆதார் விவரங்களை அணுகுவதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் அனுமதி குடிமக்களின் பாதுகாப்பையும், அவர்களின் தனிப்பட்ட விவரங்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் என கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க | அவசரமாக ரூ.2 லட்சம் கடன் வேண்டுமா... ஆதார் அட்டை போதும் - எப்படி வாங்குவது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ