Heart Health Women | பெண்களே இதயம் காட்டும் அறிகுறிகளை நீங்கள் கவனிக்க மறந்துவிடாதீர்கள். மாரடைப்பு உள்ளிட்ட மிகப்பெரிய இதய நோய் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். சரி, இதய நோய்க்கு காரணம் என்ன? என்றால் நாட்பட்ட மன அழுத்தம் ஆகும். ஆம், மன அழுத்தம் உங்கள் மனநிலை, செரிமான ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். நாள்பட்ட மன அழுத்தம் பல்வேறு உடல், மன மற்றும் நடத்தை தொடர்பான அறிகுறிகளை ஏற்படுத்தும். குறிப்பாக, இதய வலி, வேகமான இதயத் துடிப்பு, செரிமானப் பிரச்சினைகள், பதட்டம், மனச்சோர்வு, எரிச்சல், தலைவலி மற்றும் தூக்கமின்மை ஆகிய அறிகுறிகள் காட்டும்.
கட்டுப்பாடற்ற மன அழுத்தம் இதயம் தொடர்பான நோய்களுக்கான ஆபத்தையும் உங்களுக்கு ஏற்படுத்தக்கூடும். மன அழுத்தத்தின் விளைவுகள் மற்றும் உங்கள் இதயத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் மன அழுத்தம்
இதய நோய் என்பது மன அழுத்தம் நேரடியாக தொடர்பாக இருக்கும் ஒரு பிரச்சனை. மன அழுத்தம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இதயத் துடிப்பை அதிகரிக்கும். இது காலப்போக்கில் இதய தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். நாள்பட்ட மன அழுத்தம், மோசமான உணவுமுறை, உடல் செயல்பாடு இல்லாமை, புகைபிடித்தல் மற்றும் அதிகப்படியான மது அருந்துதல் போன்ற ஆரோக்கியமற்ற நடத்தைகளையும் ஊக்குவிக்கும். இவை அனைத்தும் இதய நோய்களை மிக மோசமாகும். நீண்ட கால மன அழுத்தம் உடலில் வீக்கத்தை அதிகரிக்கும். அதிகரித்த வீக்கம் தமனிகளில் பிளேக்கை உருவாக்கி இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். மேலும், மன அழுத்தம் இதய அரித்மியா போன்ற நிலைமைகளுக்கு வழிவகுக்கும்.
உங்கள் இதயத்தை எவ்வாறு பாதுகாப்பது?
மன அழுத்தத்தின் ஆரம்ப அறிகுறிகளை கண்டறிந்து அவற்றைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது முக்கியம். எனவே, ஆரோக்கியமான இதயத்திற்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மன அழுத்த மேலாண்மை அவசியம். வழக்கமான உடற்பயிற்சி, தியானம் மற்றும் ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் மன அழுத்தத்தை திறம்படக் குறைக்கும். மன அழுத்தத்தை திறம்பட நிர்வகிக்க நீங்கள் நிபுணர்களின் உதவியையும் நாட வேண்டும்.
மன அழுத்தத்தின் மற்ற விளைவுகள்
கட்டுப்பாடற்ற மன அழுத்தம் உங்கள் எடை அதிகரிக்கவும், தூக்கமின்மையை ஏற்படுத்தும். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் நேரடியாக பாதிக்கும். பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கவும் மன அழுத்தம் வழிவகுக்கும். மேலும், உடலில் ஹார்மோன் சமநிலையின்மையையும் ஏற்படுத்துவதிலும் இப்பிரச்சனை முக்கிய பங்காற்றுகிறது. எனவே நீங்கள் உஷாராக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | பிளாக் காபியின் 6 ஆரோக்கிய நன்மைகள் - காலையில் அதை ஏன் சாப்பிடுவது நல்லது?
மேலும் படிக்க | காலையில் பிளாக் காபி குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ