Pensioners Latest News: ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப பென்ஷன் வாங்கும் நபர்களுக்கும் கூடுதல் பென்சன் குறித்த தகவல்களை அறிந்துக்கொள்ளுங்கள்.
Additional Pension Latest Update: ஓய்வூதியதாரர்களுக்கு பயன் அளிக்கக்கூடிய முக்கியச் செய்தி குறித்து அறிந்துக்கொள்ளுவோம். 80 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கூடுதல் பென்ஷன் பணம் எப்படி பெறுவது என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
ஓய்வூதியம் பெறும் மிகவும் வயதானவர்களுக்கு கூடுதல் நன்மைகளை வழங்குவதற்கு அரசு பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக 75 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். அதேநேரத்தில் அவர்களின் தேவைகளும் அதிகரிக்கும் மற்றும் பொருளாதார ரீதியான ஆதரவு தேவைப்படும். இந்த விஷயங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு அரசு ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, ஒரு குறிப்பிட்ட பென்ஷன் தொகையை வழங்கி வருகிறது.
இந்த கூடுதல் பென்ஷன் தொகை என்பது ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப பென்ஷன் வாங்கும் நபர்களுக்கும் பொருந்தும். இந்த தொகை "கூடுதல் பென்ஷன்" தொகை என்று அழைக்கப்படுகிறது. இது 80 வயதிற்கு மேற்பட்ட பென்ஷன் வாங்கக்கூடிய நபர்களுக்கு வழங்கப்படுகிறது.
தனி நபர் ஓய்வூதியராக இருந்தாலும் சரி அல்லது குடும்ப பென்ஷன் வாங்கும் நபராக இருந்தாலும் சரி சிசிஎஸ் (ஓய்வூதியம்) விதிமுறைகள் படி, இவர்களுக்கு 80 வயதிற்கு மேற்பட்ட கூடுதல் பென்ஷன் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
எந்த மாதம் பிறந்தநாள் வருகிறதோ, அந்த மாதத்தினுடைய முதல் தேதியிலிருந்தே இந்த கூடுதல் பென்ஷன் தொகை அவர்களுடைய ஓய்வூதிய தொகையுடன் சேர்த்து வழங்கப்படும். இந்ததொகை அரசு நிர்ணயித்துள்ள விகிதகளின் படி கூடுதல் பென்ஷன் தொகையுடன் சேர்த்து வழங்கப்படுகிறது.
ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் வாங்கக்கூடிய நபருடைய வயது 80 முதல் 85 வயதிற்குள் இருந்தால் கூடுதல் பென்ஷன் தொகையாக அடிப்படை பென்ஷன் அல்லது குடும்ப பென்ஷன் தொகையில் 20% சேர்த்து வழங்கப்படும்.
ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் வாங்கக்கூடிய நபருடைய வயது 85 வயது முதல் 90 வயதுக்குள் இருந்தால் கூடுதல் பென்ஷன் தொகையாக அடிப்படை பென்ஷன் அல்லது குடும்ப பென்ஷன் தொகையில் 30% சேர்த்து வழங்கப்படும்.
ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் வாங்குவடைய நபருடைய வயது 90 முதல் 95 வயதுக்குள் இருந்தால் கூடுதல் பென்ஷன் தொகையாக அடிப்படை பென்ஷன் அல்லது குடும்ப பென்ஷன் தொகையில் 40% சேர்த்து வழங்கப்படும்.
ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் வாங்கும் நபரின் வயது 95 முதல் 100 வயதுக்குள் இருந்தால் கூடுதல் பென்ஷன் தொகையாக அடிப்படை பென்ஷன் அல்லது குடும்ப பென்ஷன் தொகையில் 50% சேர்த்து வழங்கப்படும்.
ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் வாங்கும் நபரின் வயது 100க்கு மேல் இருந்தால் கூடுதல் பென்ஷன் தொகையாக அடிப்படை பென்ஷன் அல்லது குடும்ப பென்ஷன் தொகையில் 100% சேர்த்து வழங்கப்படும்.
பென்ஷன் அலுவலகப் பதிவுகளில் ஓய்வூதியம் வாங்கும் நபரின் பிறந்த தேதி இல்லை என்றால் ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறும் நபர் 80 வயதை பூர்த்தி செய்த ஆண்டின் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் கூடுதல் பென்ஷன் அல்லது குடும்பப் பென்ஷன் வழங்கப்படும்.