Budget 2025: ஊதியக்குழு, டிஏ அரியர், யுபிஎஸ், ஓய்வூதியம்.... மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் மாஸ் அறிவிப்புகள்

Union Budget 2025: மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் என்ன? ஊழியர் சங்கங்கள் எந்தெந்த கோரிக்கைகளை நிதி அமைச்சகத்தின் முன் வைத்துள்ளன. இவை நிறைவேறுமா? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 1, 2025, 09:35 AM IST
  • இன்னும் சில மணி நேரங்களில் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
  • மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் என்ன?
  • இந்த பதிவில் காணலாம்.
Budget 2025: ஊதியக்குழு, டிஏ அரியர், யுபிஎஸ், ஓய்வூதியம்.... மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் மாஸ் அறிவிப்புகள் title=

Union Budget 2025: இன்னும் சில மணி நேரங்களில் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இது குறித்து பலருக்கு பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் என்ன? ஊழியர் சங்கங்கள் எந்தெந்த கோரிக்கைகளை நிதி அமைச்சகத்தின் முன் வைத்துள்ளன. இவை நிறைவேறுமா? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Budget 2025 Expectations: பட்ஜெட் 2025 எதிர்பார்ப்புகள்

இந்த முறை பட்ஜெட்டுக்கு முன்னரே மத்திய அரசு ஊழியர்களுக்கு பல மகிழ்ச்சிகரமான செய்திகள் கிடைத்துள்ளன. சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை மாற்றியமைக்க 8வது சம்பள ஆணையத்தை செயல்படுத்துவதற்கு ஜனவரி மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தற்போது பட்ஜெட்டில் 8வது ஊதியக் குழு பற்றிய அதிக விவரங்கள், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் சில மாற்றங்கள், 18 மாத டிஏ அரியர் தொகை, ஓய்வூதிய கம்யுடேஷன், புதிய வரி முறையில் என்பிஎஸ் என மத்திய அரசு ஊழியர்கள் பல வித எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர்.

8th Pay Commission: 8வது ஊதியக்குழு

மத்திய அரசு சமீபத்தில் 8வது ஊதியக் குழுவிற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன் அமைப்புக்கான சரியான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை, ஆனால் 8வது சம்பள ஆணையம் ஜனவரி 1, 2026 அன்று அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 8வது ஊதியக்குழுவை அமல்படுத்துவதால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்திலும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்திலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படும். அதோடு அகவிலைப்படி (Dearness  Allowance) திருத்தமும் செய்யப்படும். இது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றாலும், அரசு ஊழியர்கள் வேறு சில நிவாரண நடவடிக்கைகளையும் இதில் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக ஓய்வூதிய சலுகைகள் தொடர்பாக எதிர்பார்ப்புகள் உள்ளன.

Unified Pension Scheme: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றங்கள்

கடந்த ஆண்டு, மத்திய அரசு மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) அறிவித்தது. பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மற்றும் தேசிய ஓய்வூதிய முறை (NPS) ஆகியவற்றின் முக்கிய அம்சங்களைக் கலந்து இது அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த வாரம், மத்திய அரசு ஊழியர்களுக்கு, NPS இன் கீழ் UPS ஐ ஒரு விருப்பமாக அரசாங்கம் அறிவித்தது. ஏப்ரல் 1, 2025 முதல் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும். தற்போதைய மற்றும் எதிர்கால மத்திய அரசு ஊழியர்கள் இரு சாராரும் UPS -ஐ தேர்ந்தெடுக்கவோ அல்லது NPS திட்டத்தைத் தொடரவோ விருப்பம் உள்ளது.

இருப்பினும், ஊழியர் சங்கங்கள் இன்னும் UPS இல் சுல மாற்றங்களைக் கோரி வருகின்றன. UPS இல் உள்ள சிக்கல்கள் காரணமாக பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் கொண்டு வர வேண்டும் என சில ஊழியர் சங்கங்கள் கோருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், அரசு ஊழியர்களுக்கு இதை மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்ற, இந்த பட்ஜெட்டில் UPS இல் சில மாற்றங்களை மத்திய அரசு அறிவிக்கக்கூடும்.

Commutation of Pension: ஓய்வூதிய கம்யுடேஷன்

ஓய்வூதியதாரர்கள் தங்கள் மாற்றப்பட்ட ஓய்வூதிய மறுசீரமைப்பை பரிசீலிக்குமாறும் மத்திய அரசைக் கோரி வருகின்றனர். பென்ஷன் கம்யுடேஷன் என்பது ஓய்வூதியத்தின் ஒரு பகுதியை மொத்தத் தொகைக்கு மாற்றும் செயல்முறையாகும். இது ஓய்வூதியதாரர்கள் காலப்போக்கில் சிறிய தொகைகளைப் பெறுவதற்குப் பதிலாக ஒரு முறையாக பெரிய கட்டணத்தைப் பெற அனுமதிக்கிறது. ஒரு மத்திய அரசு ஊழியர் ஓய்வூதியத்தின் ஒரு பகுதியை, கார்பஸில் 40% ஐ தாண்டாத மொத்தத் தொகையாக மாற்றலாம்.

தற்போது, ​​ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியரின் (Central Government Employees) மாற்றப்பட்ட ஓய்வூதியத்தை, மாற்றப்பட்ட தேதியிலிருந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அரசாங்கம் மீட்டெடுக்கிறது. மாற்றப்பட்ட பகுதிக்கான ரெஸ்டொரேஷன் அதாவது மறுசீரமைப்பு காலத்தை 12 ஆண்டுகளாகக் குறைக்குமாறு மத்திய அரசு ஊழியர் பிரதிநிதிகள் நிதியமைச்சரிடம் முறையாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

NPS: புதிய வரி முறையில் என்பிஎஸ்

2024 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், புதிய வருமான வரி முறையைத் தேர்ந்தெடுக்கும் ஊழியர்களுக்கான NPS விதிகளில் அரசாங்கம் மாற்றங்களைச் செய்தது. பிரிவு 80CCD (2) இன் கீழ் ஓய்வூதியத் திட்டங்களுக்கு முதலாளியின் பங்களிப்புகளுக்கான விலக்கு வரம்பு புதிய வரி முறையைத் தேர்ந்தெடுத்தவர்களுக்கு முன்பிருந்த 10% இல் இருந்து 14% ஆக உயர்த்தப்பட்டது. இந்த பட்ஜெட்டில், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு NPS தொடர்பான கூடுதல் வருமான வரி சலுகைகளை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்று நிபுணர்கள் இப்போது எதிர்பார்க்கின்றனர். 

Tax Rates: குறைந்த வரி விகிதங்கள்

வரிசெலுத்தும் அனைவரையும் போலவே, அரசு ஊழியர்களும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க வரி விகிதங்கள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கிறார்கள். பணவீக்க விகிதம் அதிகமாக இருப்பதால், பழைய மற்றும் புதிய வரி முறைகளின் கீழ், அரசு வரி அடுக்குகளை முழுமையாக மறுபரிசீலனை செய்யும் என நம்பப்படுகின்றது. புதிய வரி முறையின் கீழ் அடிப்படை வரி விலக்கு வரம்பை ரூ.10 லட்சமாக உயர்த்துவது ஒரு முக்கிய முடிவாக அமையலாம். அதாவது ஆண்டுதோறும் ரூ.10 லட்சம் வரை சம்பாதிக்கும் தனிநபர்கள் புதிய வரி முறையைத் தேர்வு செய்தால் எந்த வருமான வரியும் செலுத்த வேண்டி இருக்காது.

18 Month DA Arrears: 18 மாத டிஏ அரியர்

கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட 18 மாத அகவிலைப்படி அரியர் தொகைக்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். கோவிட் 18 தொற்றுநோய் பரவிய போது ஏற்பட்ட அசாதாரண சூழலை சமாளிக்க அப்போது மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவை முடக்கப்பட்டு அந்த தொகை தேவை அதிகமாக உள்ள மக்களுக்காக பயன்படுத்தப்பட்டது. நிலமை சரியானவுடன் முடக்கம் நீக்கபட்டது. முடக்கப்பட்ட 18 மாத டிஏ நிலுவைத் தொகையை அளிப்பதற்கான அறிவிப்பை அரசாங்கம் பட்ஜெட்டில் வெளியிடுன் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் படிக்க | LIVE | மத்திய பட்ஜெட் இன்று தாக்கல், வருமான வரி விலக்கு, ஓய்வூதியம், புதிய அறிவிப்புகள் அப்டேட்

மேலும் படிக்க | அலர்ட்! இன்று (பிப்ரவரி 1) முதல் உங்கள் UPI பரிவர்த்தனை செயல்படாமல் போகலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News