பிபிஎஃப் கணக்கு: பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப் - Public Provident Fund) கணக்கு என்பது ஒரு நீண்ட கால முதலீட்டு கருவி மட்டுமல்ல. எந்தவொரு நிதி நெருக்கடியின் போதும், இந்த கணக்கு வைத்திருப்பவர் இதன் முதலீட்டு காலத்தில் திரட்டப்பட்ட பிபிஎஃப் வைப்பு தொகைக்கு, எதிராக அதாவது, பொது வருங்கால வைப்பு நிதிக் கணக்கிலிருந்து கடன் பெற்றுக் கொள்ள முடியும். வரி மற்றும் முதலீட்டு நிபுணர்களின் கருத்துப்படி, பிபிஎஃப் நிறுவனத்திடமிருந்து கடன் வாங்குவது தனிநபர் கடன், தங்கக் கடன், நிலையான வைப்புத்தொகைக்கு எதிரான கடன், பிற சில்லறை வங்கி கடன்களை விட மிகவும் மலிவானது என்று கூறப்படுகிறது.
பிபிஎஃப் வைப்பு தொகைக்கு (Public Provident Fund) எதிரான கடன் 1 சதவீத வட்டி விகிதத்தில் கிடைக்கிறது. எனவே, கொரோனா வைரஸ் லாக் டவுன் சமயத்தில் ஒருவருக்கு பண நெருக்கடி இருந்தால், பிபிஎஃப் வைப்புத் தொகைக்கு எதிரான கடன் பெற்றுக் கொள்வது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
செபியின் பதிவு செய்யப்பட்ட வரிமற்றும் முதலீட்டு துறையில் நிபுணரான மணிகரன் சிங்கால், "புழக்கத்தில் உள்ள பிற சில்லறை வங்கி கடனை, பி எ ஃப் வைப்புத் தொகைக்கு எதிரான கடனுடன் ஒப்பிட்டு கூறுகையில், "பிபிஎஃப் வைப்பு தொகைக்கு எதிரான கடன் நிச்சயமாக தனிநபர்கடன், தங்கக் கடன் அல்லது நிலையான வைப்புத்தொகைக்கு எதிரான கடன் (எஃப்.டி) போன்ற பிற சில்லறை கடன்களை விட மிகவும் மலிவானது. ஆனால் பிபிஎஃப் வழங்கும் கடன் என்பது ஒருவரது வைப்புத் தொகை எவ்வளவு என்பதை பொறுத்தது.மேலும் சில்லறை வங்கி கடன் என்பது ஒருவரது மாத வருமானத்திற்கு உட்பட்டது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எனவே ஒருவருக்கு நிதி நெருக்கடி ஏற்படும்போது தேவைப்படும் தொகை பிபிஎஃப் கணக்குக் கடன் மூலம் பெற முடியும் என்றால். ஒருவர் அந்த வாய்ப்பையே தேர்ந்தெடுக்க வேண்டும். எனவும் கூறினார்.
மேலும் செய்தி படிக்க: NPS கணக்கைத் திறக்க ஆதார் அடிப்படையிலான காகிதமற்ற KYC செயல்முறை அனுமதி
மும்பையைச் சேர்ந்த வரி மற்றும் முதலீட்டு நிபுணர் பல்வந்த் ஜெயின் பிபிஎஃப் வைப்பு தொகைக்கு எதிரான கடனைப் பற்றி கூறுகையில், "பிபிஎஃப் வைப்பு தொகைக்கு எதிரான கடன் பிபிஎஃப் கணக்கின் மூன்றாம் ஆண்டு முதல் கிடைக்கத் தொடங்குகிறது. இருப்பினும், இந்தக் கடனை மூன்றாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரை மட்டுமே பெற முடியும். உங்கள் பிபிஎஃப் கணக்கு காலம் ஆறு ஆண்டு காலம் ஆகி விட்டால், ஒருவர் பிபி எப் கணக்கை முழுக்க திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.
பால்வந்த் ஜெயின் கருத்தையே பிரதிபலிக்கும் சிங்கால், பிபிஎஃப் (Public Provident Fund) கணக்கிலிருந்து மூன்றாம் ஆண்டு முதல் ஆறாவது ஆண்டு வரை கடன் எடுக்க முடியும் என்று கூறினார். உங்கள் பிபிஎஃப் கணக்கை டிசம்பர் 2017 இல் (2017-18 நிதியாண்டில்) துவங்கி உள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம், 2017-2018 நிதியாண்டில் (2017 + 2 = 2019) 2022-2023 (2017 + 5 = 2022) வரை மட்டுமே நீங்கள் கடன் பெற முடியும்.
கடன் விண்ணப்பிக்கப்பட்ட ஆண்டிற்கு முந்தைய மற்றும் இரண்டாம் ஆண்டின் இறுதியில் உங்கள் கணக்கில் உள்ள நிலுவைத் தொகையில் இருந்து அதிகபட்சம் 25 சதவீதம் வரை கடன் தொகையைப் பெறலாம்.
ஒருவர் 2019 நவம்பரில் (2018-2019 நிதியாண்டில்) கடன் பெற விண்ணப்பித்தால், 2019 மார்ச் மாத இறுதியில் இருந்த தொகையில் 25 சதவீதத்தை அந்த நபர் கடனாக பெற்றுக் கொள்ள முடியும்.
(மொழியாக்கம் - வானதி கிரிராஜ்)