சரஸ்வதி பூஜை கொண்டாடுவதற்கு கேரளாவில் உள்ள கொச்சின் பல்கலைக்கழகம் மறுப்பு தெரிவித்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 9-ம் தேதி சரஸ்வதி பூஜை கொண்டாடுவதற்கு கொச்சி பல்கலைக்கழக வளாகத்தில் வட இந்திய மாணவர்கள் சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், நமது பல்கலைக்கழகம் மதசார்பற்ற பல்கலைக்கழகம். ஒரு தனி மதத்தின் பூஜைக்கு மட்டும் சிறப்பு அனுமதி கொடுக்கமுடியாது என்று கூறிவிட்டார். இதனால் மாணவர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது.
Joint Registrar,Cochin University of Science&Technology: VC has declined request by North Indian students to conduct ‘Saraswati Pooja’ in Cochin University College of Engineering, Kuttanad campus,as it's a secular campus, can't permit functions of any particular religion. #Kerala pic.twitter.com/cYXsNSgIYQ
— ANI (@ANI) February 7, 2019
இதனிடையே சரஸ்வதி பூஜை தொடர்பான மற்றொரு சர்ச்சை பாட்னா மாநிலத்தின் ஒரு கல்லூரியில் நடந்துள்ளது. இங்கு சரஸ்வதி பூஜை கொண்டாட்டத்தில் பார் டான்சர்கள் நடனமாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.