இந்தியாவில் 2017 ஆம் ஆண்டில் 8,02,000 குழந்தை இறப்புக்கள் பதிவாகியுள்ளன, ஐந்து ஆண்டுகளில் மிக குறைவானது, குழந்தை இறப்பு மதிப்பீட்டிற்கான ஐ.நா. தெரிவித்துள்ளது...
2012 ஆம் ஆண்டில் 22 சதவீதமாக இருந்த, ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம், 2017 ஆம் ஆண்டு 18 சதவீதமாகக் குறைந்துள்ளது, என ஐநா அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒரு மில்லியனுக்கு குறைவாக வந்துள்ளது இதுவே முதல் முறை.
இந்தியாவில் குழந்தைகளின் இறப்பு விகிதம் தொடர்ந்து அதிகமாவே உள்ளது என உலக நாடுகளில் ஒரு எண்ணம் பரவி வருகையில், ஐநாவின் இந்த அறிக்கை உலக நாடுகளிடையே மட்டுமல்லாது, இந்தியர்களிடையேவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில், 1000த்தில் 39 ஆண் குழந்தைகளும் 1000த்தில் 40 பெண் குழந்தைகளும் இறப்பதாக செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இப்போது இந்தியாவிலும் அதே அளவாக குறைந்துள்ளது. இது மகிழ்ச்சி அளிப்பதாக இருப்பினும், தவிர்க்கக் கூடிய குழந்தைகள் இறப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
2017 ஆம் ஆண்டில் 15 வயதிற்கு உட்பட்டோரின் இறப்பு, 63 லட்சமாக உள்ளது. அதில் 54 லட்சம் இறப்புகள் ஐந்து வயதிற்கு உட்பட்டக் குழந்தைகளுடையது. அதிலும் பெரும்பாலானவை, கைக்குழந்தைகள் தான் என உலக சுகாதார அமைப்பு (UNICEF), ஐநாவின் மக்கள் தொகை பிரிவு மற்றும் உலக வங்கி அறிவித்துள்ளது.
"1990லிருந்து தொடர்ந்து இந்த இறப்பு விகிதங்களை குறைக்க முயற்சி எடுத்து வருகிறோம், இருப்பினும் குழந்தைகளின் இறப்பினை முழுதாக நிறுத்த முடியவில்லை. அதற்கு காரணம், அவர்கள் பிறக்கும் இடங்களும் சூழ்நிலைகளுமே. சுகாதாரமான குடிநீர், தேவையான மருந்துகள், தடுப்பூசி போன்றவற்றின் மூலமாக இந்த பிரச்சனையை சரி செய்துவிடலாம்," என யூனிசெபின் தகவல்கள் பிரிவின் இயக்குனர் லாரான்ஸ் சாண்டி கூறினார்.
உலக அளவில், சஹாரன் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் தான், பாதிக்கும் மேற்பட்ட இறப்புகள் நிகழ்கின்றன. மேலும் 30 சதவீத இறப்புகள் கிழக்கு ஆசிய பகுதிகளில் நிகழ்கின்றன. வருவாய் கம்மியாக உள்ள சஹாரன் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பதின்மூன்றில் ஒருவர் இறக்க நேரிடுகிறது; அதிக வருவாய் உள்ள நாடுகளில் 185ல் ஒருவர் இறக்க நேரிடுகிறது.
2.5 மில்லியன் குழந்தைகள், பிறந்த ஒரு மாத காலத்திற்குள் இறக்கின்றன. அதிக வருவாய் உள்ள நாடுகளில், அதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பது, தடுக்கக் கூடிய நோய்களான மலேரியா, வயிற்றுப்போக்கு, நிமோனியா போன்ற நோய்களால் தான் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.