புதுடெல்லி: இன்று பூரண சந்திர கிரகணம் நிகழ்கிறது. இது இந்தியாவில் பார்க்க முடியும். கிரகண காலத்தில் சில நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியமானது. இன்று நள்ளிரவு, 12:13 மணிக்கு பூரண சந்திரகிரகணம் தொடங்குகிறது. அது 1:31 மணிக்கு உச்சம் அடைந்து அதிகாலை 4:30 மணிக்கு முடிகிறது. அதாவது மொத்த 5 மணி நேரம் வரையில் சந்திரகிரகணம் இருக்கும்.
சூரியன் பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணம் உண்டாகிறது. அந்நேரத்தில் பூமியினுடைய நிழல் நிலவின் மீது விழுந்தால் அதனை சந்திர கிரகணம் என்கிறோம். அந்த நேரத்தில் நிலவு தெரியாது. சந்திர கிரகணத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பல முக்கிய இந்து கோயில்களில் சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சந்திர கிரகணம் வரும் இன்று இரவு 1.32 மணிக்குப் பௌர்ணமி திதி, உத்திராட நட்சத்திரம், மகர ராசி, மேஷ லக்னத்தில் தொடங்குகிறது. கிரகண காலம் என்பது நம் சாஸ்திரங்களில் புண்ணிய காலமாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. கிரகண காலத்தில் நாம் செய்யும் நல்ல காரியம், ஒன்றுக்குப் பல மடங்கு பலன்களைத் தரவல்லது.