Pongal 2022 ராசிபலன்: இந்த ராசிக்காரர்களுளின் செல்வம் தங்கும், வளமும் மகிழ்ச்சியும் பொங்கும்

ஜோதிட சாஸ்திரத்தின் படி, சூரியனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளையும் பாதிக்கிறது. இதன் காரணமாக, நீண்ட நாட்களாக பிரச்சனையை சந்தித்துக்கொண்டிருந்த ராசிகளுக்கு நிவாரணம் கிடைக்கிறது. பொங்கல் ராசிபலன் இதோ.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 13, 2022, 12:52 PM IST
  • ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த பொங்கல் சிறப்பாக அமையும்.
  • தனுசு ராசிக்காரர்களுக்கு இது நல்ல நேரம்.
  • மீன ராசிக்காரர்களுக்கு வாகனம், வீடு, நிரந்தர சொத்து, மகிழ்ச்சி போன்ற பல வித நன்மைகள் கிடைக்கும்.
Pongal 2022 ராசிபலன்: இந்த ராசிக்காரர்களுளின் செல்வம் தங்கும், வளமும் மகிழ்ச்சியும் பொங்கும்  title=

தைப் பொங்கல் ராசிபலன்: தமிழர்களாகிய அனைவருக்கும் தைப் பொங்கல் மிகவும் முக்கியமான மற்றும் விசேஷமான பண்டிகையாகும். தட்சிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு சூரியன் வருவதை குறிக்கும் தைத்திருநாள், விவசாயத்தின் பெருமையைப் பேசும் நாளாகவும் உள்ளது. 

ஜோதிட சாஸ்திரத்தின் படி, சூரியனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளையும் (Zodiac Signs) பாதிக்கிறது. இதன் காரணமாக, நீண்ட நாட்களாக பிரச்சனையை சந்தித்துக்கொண்டிருந்த ராசிகளுக்கு நிவாரணம் கிடைக்கிறது. இந்த ஆண்டும் பொங்கல் முதல் மாறும் கிரக நிலைகள் பலருக்கு நல்ல பலன்களைக் கொண்டு வருகின்றது. பொங்கலுக்கான ராசிபலனை (Pongal Horoscope) இந்த பதிவில் காணலாம். 

சூரிய பகவான் நேர்மறையான வேகத்தைக் கொடுப்பார்

ஜோதிடர்களின் கூற்றுப்படி, சூரிய பகவான் மகர ராசியில் நுழையும் போது, ​​​​அதன் விளைவு முதலில் கர்ம பலன்களை முடிவுக்கு கொண்டுவரும். கர்ம பலன்களின் தாக்கம் முடிந்தவுடன், மீண்டும் பக்தி மற்றும் தர்ம காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். சுப லக்னத்தின் வருகையால் திருமணம் முதலிய சப காரியங்கள் அதிகமாக நடக்கும். சூரிய பகவான் நேர்மறையான ஆற்றலை அனைத்து இடங்களிலும் பரப்புவார். 

மகிழ்ச்சி மழை பெய்யும்

இம்முறை பொங்கல் பண்டிகை ஜனவரி 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது. சூரிய பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குள் நுழைவார். பிப்ரவரி 12 வரை மகர ராசியில் சஞ்சரிப்பார். இதன் பிறகு கும்ப ராசிக்குள் நுழைவார். 

சூரிய பகவான் மகர ராசியில் நுழையும் போது, ​​நான்கு ராசிக்காரர்களிடம் அதிக கருணை காட்டுவார். இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சி மழை பொழியப்போகிறது. மேலும் இந்த தைப் பொங்கலில் லட்சுமி தேவியின் ஆசீர்வாதமும் கிடைக்கும். இந்த அதிர்ஷ்டக்கார ராசிகள் எவை என்று இந்த பதிவில் காணலாம்.

ALSO READ | இன்னும் 2 நாட்களில் இந்த 3 ராசிக்காரர்களின் தலைவிதி தலைகீழாக மாறும்

ரிஷபம் (Taurus): ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த பொங்கல் சிறப்பாக அமையும். பிள்ளைகள், வீடு, வாகனம் என சிறந்த மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். மரியாதையும் அதிகரிக்கும். இதன் மூலம் சூரிய நாராயணனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். இந்த ஆண்டு முழுவதும் அன்னை லட்சுமியின் ஆசீர்வாதமும் கிடைக்கும். 

துலாம் (Libra): இந்த பொங்கல் துலா (Libra) ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். ஆன்மீகப் பணிகளில் அதிகமாக ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். நல்ல உணவு உண்பீர்கள். இதனுடன், இந்த காலகட்டத்தில் உங்களுக்கு பண வரவும் அதிகமாக இருக்கும். மகாலக்ஷ்மி ஸ்தோத்திரம் பாராயணம் செய்வது மிகவும் நல்ல பலன்களை கொடுக்கும். வெள்ளிக்கிழமை அன்று லட்சுமி தேவிக்கு சிறப்பு வழிபாடு செய்யுங்கள். இந்த நாளில் பெண்களும் வைபவ லட்சுமியை வழிபடலாம். ஸ்ரீ சுக்தியை படியத்தால் கை மேல் பலன் கிடைக்கும்.

தனுசு (Sagittarius): தனுசு ராசிக்காரர்களுக்கு இது நல்ல நேரம். இந்த சமயத்தில் உங்கள் வாழ்வில் ஆன்மீக ஈடுபாடு அதிகமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், உணவு பற்றாக்குறை கண்டிப்பாக இருக்காது. அன்னபூரணி அன்னையின் அருள் நிலைத்திருக்கும். வீட்டில் உணவுக்கோ பணத்துக்கோ தட்டுப்பாடு இருக்காது. பொங்கலன்று வயதானவர்களுக்கு தேவையானதை செய்யுங்கள். இந்த காலகட்டத்தில் சோம்பல் மற்றும் போதை பழக்கத்தில் இருந்து விலகி இருங்கள்.

மீனம் (Pisces): இந்த தைப் பொங்கல் மீன (Pisces) ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். இந்த காலத்தில் நிதிப் பலன்கள் கிடைக்கும். இதனுடன், வாகனம், வீடு, நிரந்தர சொத்து, மகிழ்ச்சி போன்ற பல வித நன்மைகள் கிடைக்கும். குபேரரை வழிபடுவது நல்ல நன்மைகளை அளிக்கும். கருப்பு எள் மற்றும் உளுந்து தானம் செய்வதன் மூலம் சனி பகவான், சூரிய பகவான் மற்றும் அன்னை லட்சுமி ஆகியோரின் ஆசீர்வாதத்தைப் பெறலாம்.

ALSO READ | இந்த ராசிக்காரர்கள் காதலில் கெட்டிக்காரர்கள்: உங்க வாழ்க்கைத் துணையின் ராசியும் இதுவா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News