புரட்டாசி மாத பெருமாள் தரிசனத்தின் மகிமைகள் தெரியுமா?

புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோவிலுக்கு சென்று காக்கும் கடவுள் விஷ்ணுவை தரிசித்தால் அறிந்தும் அறியாமலும் செய்த   பாவங்கள் அத்தனைக்கும் விமோசனம் கிடைத்து விடும்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 2, 2021, 06:01 AM IST
  • புரட்டாசி மாத பெருமாள் தரிசனத்தின் மகிமைகள்
  • பெருமாளை வணங்குவதற்கு என்று சில வழிமுறைகள் உண்டு
  • புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வணங்கினால் பாவங்களின் சுமை குறையும்
புரட்டாசி மாத பெருமாள் தரிசனத்தின் மகிமைகள் தெரியுமா?  title=

புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோவிலுக்கு சென்று காக்கும் கடவுள் விஷ்ணுவை தரிசித்தால் அறிந்தும் அறியாமலும் செய்த   பாவங்கள் அத்தனைக்கும் விமோசனம் கிடைத்து விடும்.

தங்களுக்கு வாழ்க்கையில் ஏதாவது கஷ்டம் வந்துவிட்டால், தங்களுடைய வாழ்க்கையில் ஏதாவது தவறாக நடந்துவிட்டால், அதற்கு பிறரை குறை சொல்வது மனிதர்களின் இயல்பான வழக்கம். ஆனால் வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் நாம் செய்த கர்ம வினைகள் தான் காரணம் என்பதை உணர்பவர்களின் எண்ணிக்கை சொற்பமே. 

நாம் செய்த பாவம் மற்றும் புண்ணிய கணக்குகளுக்காக தான் கடவுள் நமக்கான நன்மையையும் தீங்கையும் கொடுக்கின்றான். வாழ்க்கையில் கஷ்ட நஷ்டங்கள் ஏற்பட்டாலும் சரி, துன்பங்கள் வந்தாலும் சரி, அதை எப்படி சரிசெய்வது என்று சிந்தித்து அதற்கான முயற்சிகளை எடுத்தால் போதும். தேவையில்லாமல் பிறரை சொல்வதும் அறியாமல் செய்யும் ஒரு பாவமே என்பதை உணர்ந்துக் கொள்வோம்.   

Also Read | Tripathi Balaji: திருப்பதி தெய்வத்தின் சனிக்கிழமை பக்தி உலா

நாம் செய்த கர்ம வினைகளை பாவங்களை கழிப்பதற்கு சாஸ்திர ரீதியாக நமக்கு வழிபாட்டு முறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஒன்றுதான் பெருமாள் வழிபாடு. அதிலும் புரட்டாசி மாதமும், சனிக்கிழமைகளிலும் பெருமாளை வணங்கினால் பாவங்களின் சுமை குறையும்.
 
பெருமாள் வழிபாடு புண்ணியத்தை சேர்க்கும். பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்தாலே வாழ்வில் முன்னேற்றம் தெரியும். இருந்தாலும்கூட, பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளை வணங்குவதற்கு என்று சில வழிமுறைகளை சாஸ்திரங்கள் குறிப்பிட்டுள்ளன.   

பெருமாள் கோவிலுக்கு சென்றால் சில விஷயங்களை செய்வது அவசியமானது.   

பெருமாள் கோவில் தீர்த்தமானது, பிணி தீர்க்கும் அற்புதமான தன்மையைக் கொண்டது. நம்முடைய உடலில் கண்ணுக்கு தெரியாத எந்த பிணி இருந்தாலும் அதை தீர்க்க கூடிய சக்தி, பெருமாள்கோவில் தீர்த்தத்திற்கு உண்டு. தீர்த்த ரூபத்தில் நம் கையில் வருவது காக்கும் கடவுளின் கருணைதான் என்பதை உணர்ந்துக் கொண்டால் நல்லது. எனவே, பெருமாள் கோவிலுக்கு சென்றால் அங்கு கிடைக்கும் தீர்த்த பிரசாதத்தை வாங்கி சிரத்தையுடன் அருந்த வேண்டும்.

Also Read | பணக்கார கடவுள் திருப்பதி பெருமாள் ஏன் குபேரனுக்கு வட்டி மட்டும் கட்டுகிறார்?

இரண்டாவதாக துளசி. பெருமாள் சூடியிருக்கும் துளசியை நம் கையில் வாங்கி நம் கண்களில் ஒற்றிக் கொண்டாலே போதும் பெருமாளின் கருணையின் முழுமையாகப் பெற்று விடலாம். பெருமாளின் அருட்கடாட்சத்தை பரிபூரணமாக பெறுவதற்கு ஒரே வழி,

பெருமாள் கோவிலில் கொடுக்கப்படும் துளசியை நமது கைகளில் வாங்கி, அதை வீட்டிற்கு எடுத்து வர வேண்டும். பெருமாள் கோவிலில் கொடுக்கும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 

பெருமாளின் சடாரி நம்முடைய தலையெழுத்தை மாற்றக்கூடியது. பிரம்மா நம்முடைய தலை எழுத்தை எப்படி எழுதியிருந்தாலும், அதை சரி செய்யக் கூடிய சக்தி சடாரி என்ற ‘பாதுகை’க்கு உண்டு.  ‘பா’ என்றால் பாவத்தை விளக்குவது என்று பொருள். ‘து’ என்றால் துன்பங்கள் விலகும் என்பதும் பொருள். ‘கை’ என்றால் அந்த பெருமாளே நம்முடைய வாழ்க்கையை கை கொடுத்து மேலே தூக்கி விடுவார் என்பது பொருள் ஆகும்.  

Also Read | ஸ்ரீசடாரி பக்தர்களுக்கு அருள் புரியும் விஷ்ணு

 நம்முடைய வாழ்க்கையில் துன்பங்கள் விலகி, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால், இருக்கும் பாவங்கள் விலகி ஐயனின் கருணை கிட்ட வேண்டும். எனவே, பெருமாள் வழிபாட்டை நிச்சலனமாக ஆத்மார்த்தமாக செய்தாலே போதும், துன்பங்கள் விலகும். நன்மைகள் நம்மை நாடி வரும். 

புரட்டாசி மாதத்தில் ஒரு நாளாவது பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாள் கோவில் தீர்த்தத்தைப் பருகி, பெருமாள் கோவில் துளசியை கையால் வாங்கி, சடாரி அருளை பெற்றால் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும்.

அதிலும், புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வணங்குவது வாழ்வில் வளங்களை சேர்த்து, மன நிம்மதியை அருளும்.  

Also Read | பழநி முருகன்-பூம்பாறை வேலப்பர் நவபாஷண சிலைகளின் வித்தியாசம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News