2022 வரும் ராகு பெயர்ச்சி இந்த 6 ராசிக்காரர்களை மோசமாக பாதிக்கும்

ஜாதகத்தில் மிகவும் அசுப யோகங்களை உருவாக்கும் கிரகங்களில், ராகு முக்கிய இடம் வகிக்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 27, 2021, 12:19 PM IST
2022 வரும் ராகு பெயர்ச்சி இந்த 6 ராசிக்காரர்களை மோசமாக பாதிக்கும் title=

புதுடெல்லி: ஜாதகத்தில் மிகவும் அசுப யோகங்களை உருவாக்கும் கிரகங்களில், ராகு முக்கிய இடம் வகிக்கிறது. 2022 ஆம் ஆண்டில் ராகு ராசியை மாற்றுவார். இந்த மாதத்தில் சனிப்பெயர்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த மாற்றங்கள் 6 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி இந்த 6 ராசிகாரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

2022 ஆம் ஆண்டில் ராகு பெயர்ச்சி (Raghu Peyarchi) இந்த 6 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

ALSO READ | குரு பெயர்ச்சி கொட்டும் மழையில் ஆலங்குடி குருபகவானை தரிசித்த பக்தர்கள்

மேஷம்: மேஷ (Aries) ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் ராகு சஞ்சாரம் நிகழவிருப்பதால் குடும்பம் மற்றும் வியாபாரத்தில் சிரமங்கள் ஏற்படும். இதனால், உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் பண இழப்பும் ஏற்படலாம். உங்களை விரும்பும் மக்களிடம் கசப்பாக பேசாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.

ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்கள் ராகுவின் சஞ்சாரத்தால் அடிக்கடி கற்பனைகளில் மூழ்கி விடுவார்கள். முடிவெடுப்பதில் தடுமாற்றம் ஏற்படலாம். செலவுகளும் அதிகரிக்கும்.

கடகம்: கடக ராசிக்காரர்கள் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு தொழிலில் சில சிரமங்களை சந்திக்க நேரிடலாம். எனவே பொறுமையுடன் செயல்படுங்கள். மன உளைச்சல் அதிகாமாக இருக்கலாம். நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும். ஆனால் புதிய வேலை கிடைக்கும் வரை பழைய வேலையை விட்டுவிடாதீர்கள், இல்லையெனில் நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம்.

கன்னி: கன்னி ராசிக்காரர்கள் பணியிடத்தில் கவனமாக இருக்க வேண்டும். மூத்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். விபத்து அல்லது வேறு காரணங்களால் காயம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையில் இந்த நேரம் சிரமங்களைத் தரலாம். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். இந்த நேரத்தில் மதிப்பு இழப்பு ஏற்படலாம், எனவே புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளுங்கள்.

தனுசு: 2022-ம் ஆண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு சட்டச் சிக்கலில் சிக்க வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் கடின உழைப்பால் மட்டுமே வெற்றி பெறுவார்கள்.

ALSO READ | ஜோதி வடிவாய் அருளும் ஈசனின் 12 ஜோதிர்லிங்கங்களின் சிறப்புகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News