ஆரோக்கியமான காதல் உறவு என்பது கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் உணர்வுகளையும் எண்ணங்களையும் புரிந்து கொண்டு விட்டுக்கொடுத்து வாழ்வதாகும். ஒரு நல்ல உறவுகளை உருவாக்க நேரமும் பொறுமையும் நிச்சயம் தேவை. கணவன்-மனைவியாக இருந்தாலும், காதலி-காதலனாக இருந்தாலும், தம்பதிகளிடையே கிண்டல், சண்டை, சச்சரவுகள் இருப்பது சகஜம். உறவுகளில் ஒருவருக்கொருவர் நல்ல புரிதல் மற்றும் பிணைப்பைக் கொண்டிருப்பதற்காக எண்ணி கேலி, கிண்டல், காமெடி செய்வது வழக்கமான ஒன்று. ஆனால் பல சமயங்களில் இதுபோன்ற காமெடி, கிண்டல்கள் உங்கள் துணையை எரிச்சலூட்டும் அல்லது அவர்களின் மனதை புண்படுத்தும். சில சமயங்களில் உங்களின் வித்தியாசமான பேச்சுக்கள் அல்லது ஒரு சின்ன நகைச்சுவை கூட உங்கள் உறவுகளில் விரிசல் வில காரணமாகிவிடும். இதுபோன்ற சூழ்நிலைகளில் இருந்து நீங்கள் தப்பிக்க உங்கள் மனைவி அல்லது காதலியிடம் நீங்கள் ஒருபோதும் சொல்லக் கூடாத சில விஷயங்கள் உள்ளன.
மேலும் படிக்க | PCOD இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்..? பிக்பாஸ் லாஸ்லியா கூறும் ஈசி டிப்ஸ் இதோ !
ஒருவரின் தோற்றத்தை பற்றி கிண்டல்
உடல் தோற்றத்தைப் பற்றி நீங்கள் உங்கள் மனைவி/காதலியிடம் கேலியாக ஏதாவது சொன்னால் அவர்கள் கோபித்து கொள்ள மாட்டார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது நிச்சயம் தவறு. எந்தப் பெண்ணும் தன் தோற்றத்தையும் ஸ்டைலையும் தன் துணைவே கேலி செய்வதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே, அவர்களின் மேக்கப், உடை, ஹேர் ஸ்டைல் என ஏதேனும் ஒன்று கூட நன்றாக இல்லை என்று நீங்கள் கருதினால் அவர்களை கேலி செய்வதற்குப் பதிலாக உங்கள் கருத்தை அவர்களிடம் சொல்லலாம்.
மட்டம் தட்டக்கூடாது
உங்கள் மனைவி அல்லது காதலி வேலைக்கு செல்லாமல், சம்பாதிக்காமல் இருந்தால், சரியாக சமைக்க தெரியவில்லை என்றால் நீங்கள் அவர்களை குறைத்து மதிப்பிட்டு பேச கூடாது. இல்லத்தரசி என்பதற்காகவோ அல்லது அவர்களுக்கு வேலை இல்லாதவர்களுக்காகவோ ஒருபோதும் கேலி/கிண்டல் செய்ய கூடாது. நீங்கள் இதுபோன்ற செயல்களைச் செய்தால், உங்கள் மனைவிக்கு உங்கள் மீது மோசமான அபிப்பிராயம் வரலாம். இதற்கு பதில் பாசமாக பேசி சந்தோசப்படுத்தலாம்.
கிண்டல் செய்யக்கூடாது
ஒவ்வொரு பெண்ணும் தன் கணவர் தன்னை ஊக்குவிக்கவும் மதிக்கவும் விரும்புவர். ஆனால் நீங்கள் தொடர்ந்து எல்லாவற்றையும் பற்றி குறை சொல்லி, அவர்களை பற்றி கேலி செய்தால் அல்லது அவமதித்தால், அது உங்கள் உறவைக் கெடுக்கும். உங்கள் துணையை கேலி செய்யும் பழக்கத்தை நீங்கள் ஒருபோதும் செய்யக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
குடும்பத்தை கேலி செய்யக்கூடாது
உங்கள் மனைவி/காதலியுடன் நல்ல உறவைப் கொண்டு செல்ல, நீங்கள் அவர்களின் குடும்பத்தை மதிக்க வேண்டியது அவசியம். ஆனால் நீங்கள் உங்கள் துணையின் குடும்ப உறுப்பினர்களை கேலி செய்தால், எந்தப் பெண்ணும் இதைக் கேட்பது சும்மா இருக்க மாட்டார்கள். இது உங்கள் உறவைக் கெடுக்கக்கூடும், மேலும் உங்கள் மீது உள்ள மதிப்பு குறையும்.
சோகத்தில் கிண்டல் கூடாது
உங்கள் மனைவி அல்லது காதலி ஏதாவது வருத்தமாக இருந்தால் அவர்களின் உணர்வுகளை தீவிரமாக எடுத்துக்கொள்வது அவசியம். அவர்களின் உணர்ச்சிகளை கிண்டல் செய்யாமல் அவர்களுக்கு ஆதரவாக பேச வேண்டும். ஒரு நபர் மதிப்புமிக்கதாக உணராதபோது, அவர் பயனற்ற தன்மை உணர்வுகளை அனுபவிக்கத் தொடங்குகிறார். இந்த உணர்வுகள் அவர்களின் அன்றாட வாழ்க்கை, வேலை மற்றும் உறவுகளை பாதிக்கலாம். உங்களால் உதவ முடியவில்லை என்றாலும் அவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்ட அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ