இந்திய ரயில்களில் தினமும் ஏராளமான பயணிகள் பயணம் செய்கின்றனர். இந்த பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வே பல விதமான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. நாம் இப்போது டிஜிட்டல் யுகத்தில் நுழைந்துள்ளதை கணக்கில், இணைய சேவை மூலம் கிடைக்கும் வசதிகளை மேம்படுத்தும் வகையிலும், அவ்வப்போது பல திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் மக்களுக்கு பல சேவைகள் ஆன்லைனில் வழங்கப்படுகின்றன. மாறிவரும் உலகில் இந்திய ரயில்வேயும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு எந்தவிதமான பிரச்னையும் ஏற்படாமல் இருக்க இந்திய ரயில்வேயும் டிஜிட்டல் முறையில் பயணிகளுக்கு பல சேவைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்திய ரயில்வேயின் மிகவும் சிறப்பு வாய்ந்த சாட்போட் சேவை குறித்து
வாட்ஸ்அப் உதவியுடன் இந்திய ரயில்வே தொடர்பான பல சேவைகளைப் பெறலாம். இது இந்திய ரயில்வேயின் Railofi சாட்போட். அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்
இந்திய ரயில்வேயின் Railofi சாட்போட் மூலம் ரயில் PNR நிலை, ரயில் நேரலை நிலை, உணவு ஆர்டர், ரயில் டிக்கெட் முன்பதிவு, ரயில் அட்டவணை, கோச் நிலை, ரயிலில் பயணிக்கும்போது ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் புகார் அளிக்கலாம். இது தவற ரயில்வே தொடர்பான பல தகவல்களைப் பெறலாம்.
மேலும் படிக்க | ரயில்களில் எந்தெந்த பெட்டிகள் எங்கெங்கு இருக்க வேண்டும்... முழு விவரம்
இந்திய ரயில்வேயின் இந்த சாட்போட்டைப் பயன்படுத்த, முதலில் +91 9881193322 என்ற எண்ணை உங்கள் ஸ்மார்ட்போனில் சேமிக்க வேண்டும். எண்ணைச் சேமித்த பிறகு, உங்கள் மொபைலில் வாட்ஸ்அப்பைத் திறக்க வேண்டும்.
வாட்ஸ்அப்பை ஓப்பன் செய்த பிறகு, இந்த சாட்போட்டின் மெசேஜ் பாக்ஸுக்குச் சென்று "ஹாய்" என்று எழுத வேண்டும். "ஹாய்" என்ற செய்தியை எழுதியவுடன் ஒரு செய்தி வரும். PNR நிலை, உணவு ஆர்டர், ரயில் நிலை போன்ற பல வகையான விருப்பங்கள்அதில் தெரியும்.
இந்த விருப்பங்களுக்கு கீழே "Select Services" என்ற விருப்பம் இருக்கும், நீங்கள் அதைக் கிளிக் செய்ய வேண்டும். நீங்கள் பெற விரும்பும் சேவையைத் தேர்ந்தெடுத்து விவரங்களை அனுப்ப வேண்டும். விவரங்களை அனுப்பிய பிறகு, PNR நிலையிலிருந்து உணவு ஆர்டர் வரை பல வகையான வசதிகளைப் பெறலாம்.
மேலும் படிக்க | இந்திய ரயில்வே... இறுதி ரிசர்வேஷன் சார்ட் தயாரிக்கும் நேரத்தில் விரைவில் மாற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ