இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: சேமிப்பு கணக்கின் வட்டி விகிதங்கள் குறைகின்றன

நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய அரசு வங்கி, அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியை அளிக்கவுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 23, 2021, 12:14 PM IST
  • பி.என்.பி, அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியை அளிக்கவுள்ளது.
  • பிஎன்பி வங்கியின் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படுகின்றது.
  • எஸ்பிஐயின் சேமிப்புக் கணக்கில் ஆண்டுக்கு 2.70 சதவீத வட்டி கிடைக்கிறது.
இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: சேமிப்பு கணக்கின் வட்டி விகிதங்கள் குறைகின்றன title=

புதுடெல்லி: நீங்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியின் (PNB) வாடிக்கையாளராக இருந்தால், இது உங்களுக்கு உதவியான செய்தியாக இருக்கும். நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய அரசு வங்கியான பி.என்.பி, அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியை அளிக்கவுள்ளது.

சேமிப்புக் கணக்கின் வட்டி விகிதங்களை மாற்ற வங்கி முடிவு செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி டிசம்பர் 1 முதல் சேமிப்புக் கணக்கின் வட்டி விகிதங்களைக் குறைக்கிறது. அதன் தகவல் PNB-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய வட்டி விகிதத்தை அறிந்து கொள்ளுங்கள்

வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, பிஎன்பி வங்கியின் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை 2.90 சதவீதத்தில் இருந்து 2.80 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவு புதிய மற்றும் பழைய வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

எவ்வளவு பண இருப்புக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, டிசம்பர் 1, 2021 முதல், சேமிப்புக் கணக்கில் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான சேமிப்புக் கணக்கு இருப்புக்கு ஆண்டு வட்டி விகிதம் (Interest Rate) 2.80 சதவீதமாக இருக்கும். ரூ.10 லட்சம் மற்றும் அதற்கு மேல் உள்ள பண இருப்புக்கு, ஆண்டு வட்டி விகிதம் 2.85 சதவீதமாக இருக்கும்.

ALSO READ:Changing Bank Branch: வீட்டில் இருந்தபடியே வங்கிக் கிளையை மாற்றலாம்..!!

PNB நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியாகும். SBI நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக உள்ளது. எஸ்பிஐயின் சேமிப்புக் கணக்கில் ஆண்டுக்கு 2.70 சதவீத வட்டி கிடைக்கிறது. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி விகிதம் உள்ளது என்பதி இங்கே காணலாம்.

பொதுத்துறை வங்கிகளில் வட்டி விகிதங்கள்

ஐடிபிஐ வங்கி: 3 - 3.25 சதவீதம்
கனரா வங்கி: 2.90 - 3.20 சதவீதம்
பாங்க் ஆப் பரோடா: 2.75 - 3.20 சதவீதம்
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி: 3.10 சதவீதம்

தனியார் வங்கிகளில் எவ்வளவு வட்டி கிடைக்கிறது?

HDFC வங்கி: 3 - 3.5 சதவீதம்
ஐசிஐசிஐ வங்கி: 3 - 3.5 சதவீதம்
கோடக் மஹிந்திரா வங்கி: 3.5 சதவீதம்
இண்டஸ்இண்ட் வங்கி: 4 - 5 சதவீதம்

ALSO READ:Good News அளித்தது PNB: வட்டி விகிதங்களை குறைத்து அதிரடி 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News