Income Tax Saving: வருமான வரியை சேமிப்பதற்கான சிறந்த வழிமுறைகள்..!!

2021-22 நிதியாண்டு (FY 2021-22) முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், உங்கள் வரி சேமிக்க சில டிப்ஸ்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 17, 2022, 04:11 PM IST
Income Tax Saving: வருமான வரியை சேமிப்பதற்கான சிறந்த வழிமுறைகள்..!! title=

2021-22 நிதியாண்டு (FY 2021-22) முடிய இன்னும் சில நாட்களே உள்ளன. இன்னும் வரிச் சேமிப்புக்கு திட்டமிடவில்லை என்றால், இந்த செய்தி உங்களுக்குத் தான். வரிச்சுமையை குறைத்து வரியை சேமிக்க சில டிப்ஸ் இதோ...

ஒரு லட்சம் சம்பளம் என்றாலும், வரியைச் சேமிக்க முடியும்,  அதற்கு முழுமையான திட்டமிடல் தேவை. 
 நீங்கள் பணி செய்யும் நிறுவனம் உங்கள் சம்பளத்தில் இருந்து வரிப் பணத்தைக் கழித்திருந்தாலும், முதலீடு குறித்த விபரங்களுடன்  வருமான வரி தாக்கல் செய்வதன் மூலம்  பிடிக்கப்பட்ட வரிபணத்தைத் திரும்பப் பெறலாம். 
10 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் இருந்தால், அதற்கான வரி விதிப்பு  30 சதவீதம்  என்பது குறிப்பிடத்தக்கது

 வரி சேமிக்கும் வழிமுறைகள்

1. முதலில் அரசு  வழங்கும் ஸ்டாண்டர் டிடக்‌ஷென் தொகையான 50 ஆயிரத்தைக் கழிக்கவும்.  இப்போது உங்கள் வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.11.50 லட்சமாக உள்ளது.

2. இப்போது நீங்கள் 80C இன் கீழ் ரூ. 1.5 லட்சம் வரை வரிவிக்கு பெறலாம். இதில், குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம், பிபிஎஃப், எல்ஐசி, இபிஎஃப், மியூச்சுவல் ஃபண்ட் (ELSS), வீட்டுக் கடனுக்காக செலுத்திய அசல் தொகை போன்றவற்றை நீங்கள் கோரலாம். இந்த வகையில், இங்கே உங்கள் வருமான வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.10 லட்சம்.

3. 12 லட்சம் சம்பளத்தில் வரி தொகையை பூஜ்ஜியம் (0) என்ற அளவில் கொண்டு வர செய்ய 80CCD (1B) இன் கீழ் தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் 50 ஆயிரத்தை முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் உங்களது வரிக்கு உட்பட்ட சம்பளம் ரூ.9.5 லட்சமாக குறைந்துவிடும்.

மேலும் படிக்க | Fake News: போலி நியமன கடித மோசடி குறித்து வருமான வரித்துறை எச்சரிக்கை!

4. இப்போது நீங்கள் வருமான வரியின் 24பி பிரிவின் கீழ் வட்டியில் ரூ. 1.5 லட்சம் வரையிலும், வருமான வரியின்  80EEA பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரையிலும் கூடுதல் விலக்கு பெறலாம். இந்த வழியில், நீங்கள் வீட்டுக் கடனுக்கான வட்டியில் மொத்தம் 3.5 லட்சங்களை விலக்கிக் கொள்ளலாம். மலிவு விலை வீடுகளுக்கு 2019 பட்ஜெட்டில் கூடுதலாக 1.5 லட்சம் விலக்கு அளிக்கப்பட்டது.

பிரிவு 80EEA இன் கீழ் வட்டிக்கு வரி விலக்கு பெறுவதற்கு, உங்கள் வீட்டுக் கடனுக்கு ஏப்ரல் 1, 2019 மற்றும் மார்ச் 31, 2022க்கு இடையில் வங்கி அல்லது NBFC ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். மேலும், சொத்தின் முத்திரைக் கட்டணம் ரூ.45 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். வீடு வாங்குபவருக்கு வேறு குடியிருப்பு சொத்து இருக்கக்கூடாது. இதன் மூலம், ரூ.3.5 லட்சத்தை க்ளெய்ம் செய்த பிறகு, உங்கள் வரிவிதிப்பு வருமானம் ரூ.6 லட்சமாக குறைந்துவிடும்.

மேலும் படிக்க | பழைய ஓய்வூதியத் திட்டம்: இந்த ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட், அறிவிப்பை வெளியிட்டது அரசு 

5. வருமான வரியின் 80D பிரிவின் கீழ், உங்கள் குடும்பத்திற்கு (மனைவி மற்றும் குழந்தைகள்) 25 ஆயிரம் ரூபாய் மருத்துவக் காப்பீட்டை நீங்கள் பெறலாம். இது தவிர, மூத்த குடிமக்கள் பெற்றோருக்குச் செலுத்தும் உடல்நலக் காப்பீட்டு பிரீமியத்திற்கு 50 ஆயிரத்தை கோரலாம். இது தவிர, 5000 ரூபாய் வரையில் சுகாதாரப் பரிசோதனையும் அனுமதிக்கப்படுகிறது. மொத்தம் 75 ஆயிரம் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தை க்ளெய்ம் செய்த பிறகு, உங்கள் வரிக்கு உட்பட்ட வருமானம் 5.25 லட்சமாக குறைந்து விடும்.

6. இப்போது ஏதேனும் ஒரு அமைப்பு அல்லது அறக்கட்டளைக்கு 25 ஆயிரம் ரூபாயை நன்கொடையாக  அளித்தால் உங்கள் வரிக்கு உட்பட்ட வருமானத்தை 5 லட்சமாக ஆகி விடும். வருமான வரியின் 80G பிரிவின் கீழ் நீங்கள் அதைக் கோரலாம். 25 ஆயிரத்தை நன்கொடையாக வழங்கும்போது, ​​உங்களின் வரிவிதிப்பு வருமானம் ரூ.5 லட்சமாக குறைந்துள்ளது.

 பூஜ்ஜிய வரி 

இப்போது உங்கள் வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ. 5 லட்சம். 2.5 முதல் 5 லட்சம் ரூபாய் வருமானத்தில், 5 சதவீதம் என்ற விகிதத்தில், உங்கள் வரி ரூ.12,500 ஆகிறது. ஆனால் இதற்கு அரசிடம் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில்  நீங்கள் செலுத்த வேண்டிய வரி பூஜ்ஜியமாக ஆகி விடும்.

மேலும் படிக்க | OPS vs NPS: பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள நன்மைகள் என்ன, விவரம் இதோ 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News