தை மாதத்தின் வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு விசேஷம். இந்த தை வெள்ளியில் அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லஹரி உள்ளிட்ட அம்மன் குறித்த பாடல்களைப் பாடி வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நாளில், அம்பாள் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில், சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள் நடைபெறும். தை மாத வெள்ளிக்கிழமையில் அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று, அம்பாளை தரிசனம் செய்தால் நன்மையாவும் கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை ராகுகால வேளையில் அம்மன் கோவிலுக்குச் சென்று அல்லது அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று அங்கே உள்ள துர்க்கை சன்னிதியில் விளக்கேற்றி வழிபடுவது, சகல தோஷங்களும், கண் திருஷ்டியும் நீங்கும். துர்க்கை சன்னிதியில் நெய் தீபம் அல்லது எள் தீபமேற்றி வழிபடுங்கள். வீட்டில் உள்ள திருஷ்டி முதலானவை நீங்கும். தை முதல் வெள்ளி தொடங்கி, அடுத்தடுத்த தை வெள்ளியிலும் அம்மன் தரிசனம் செய்வது கூடுதல் பலனைத் தரும்.