oversleeping Side Effects | உடல் ஆரோக்கியத்துக்கு தூக்கம் முக்கியமானது, அவசியமானது. தூக்கம்மின்மை உடலுக்கு பல பிரச்சனைகளை கொண்டு வந்துவிடும். குறைந்தபட்சம் 8 மணி நேரம் தினமும் ஒருவர் தூங்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். குறிப்பாக இரவு நேர தூக்கத்தை தவிர்க்கவே கூடாது என்றும் எச்சரிக்கிறார்கள். இதற்கு காரணம் நீரிழிவு போன்ற வாழ்வியல் நோய்கள் வருவதற்கு இரவு நேர தூக்கமின்மையும் ஒருவகையில் காரணம் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். அதேநேரத்தில் அதிகம் தூங்குவதும் ஆபத்தானது. கும்பகர்ணன் போல் எப்போது பார்த்தாலும் தூங்கிக் கொண்டே இருப்பவர் என்றால், உங்களுக்கான முக்கியமான தகவல் இது. அதிக தூக்கம் ஆரோக்கியத்துக்கு ஆபத்தானது.
அதிகமாக தூங்குவதால் ஏற்படும் தீமைகள்
1. இதய நோய்
8 மணி நேரத்திற்குப் பிறகும் நீங்கள் எழுந்திருக்கவில்லை என்றால், அலாரம் வைத்து எழுந்துவிடுங்கள். அல்லது குடும்ப உறுப்பினர்களை எழுப்பிவிட சொல்லுங்கள். ஏனென்றால் நீங்கள் அதிக நேரம் தூங்கினால், உங்கள் இதயத்துக்கு ஆபத்து. இது கரோனரி தமனி நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.
மேலும் படிக்க | 30 நிமிட ஜாகிங் போதும்: உடல் ஆரோக்கியம் அட்டகாசமாய் இருக்குமாம்
2. தலைவலி
உங்களுக்கு போதுமான தூக்கம் கிடைத்தால், அது சோர்வு மற்றும் தலைவலியை நீக்குகிறது, ஆனால் நீங்கள் அதிகமாக தூங்கப் பழகினால் தலைவலி அதிகரிக்கும், எனவே இந்த கெட்ட பழக்கத்தை சீக்கிரம் மாற்றவும்.
3. மனச்சோர்வு
குறைவாக தூங்குவது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். ஆனால் அதிகமாக தூங்குவதும் இதுபோன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாதவர்கள் அடிக்கடி மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
4. உடல் பருமன்
வரம்புக்கு மேல் தூங்கினால், உடல் செயல்பாடுகளுக்கு நேரம் ஒதுக்க முடியாது. அப்படிப்பட்ட நிலையில் வயிறு மற்றும் இடுப்பில் கொழுப்பு அதிகரிப்பது இயற்கை. இது பிற்காலத்தில் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். எனவே எப்போது பார்த்தாலும் கும்பகர்ணன் போல் தூங்குவதை தவிர்த்து உடலுக்கு தேவையான அளவு மட்டும் தூங்குவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க| Brain Health: மூளையின் ஆற்றலை அதிகரிக்க உதவும்.... சில ஆரோக்கியமான பழக்கங்கள்
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ