ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை முறியடிக்க ரஷ்யா கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்த கூடும் என்று நம்பப்படும் நிலையில், கிரிப்டோகரன்சி குறித்த பல ஊகங்கள் உருவாகியுள்ளது.
மேலும், உக்ரைன் கிரிப்டோகரன்சி வடிவில் நன்கொடை பெறுவதாகவும் சில செய்திகள் வெளிவந்தன. உக்ரைன் இதுவரை $45 மில்லியனுக்கும் அதிகமான நன்கொடைகளைப் பெற்றுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், ரஷ்யா - உக்ரைன் போருக்குப் பிறகு கிரிப்டோகரன்சியின் எதிர்காலம் எந்த அளவிற்கு மாறக்கூடும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆங்கில இதழான Outlook இதழில் செய்தியில், Unocoin நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சாத்விக் விஸ்வநாத், இந்தியாவில் கிரிப்டோ பரிமாற்றம் குறித்து கூறுகையில், 'கார்ப்பரேட் மட்டத்தில் உள்ளவர்கள் ஏற்கனவே இந்த இரு நாடுகளிலும் கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்துள்ளன என்கிறார். இதற்குக் காரணங்கள், அவற்றின் பொருளாதாரத்தில் உள்ள உறுதியற்ற தன்மை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ஃபியட் கரன்சியின் மதிப்பு குறைந்து வருவது ஆகியவை.
மேலும் படிக்க | கிரிப்டோகரன்சி விளம்பரம் தொடர்பாக கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டது ASCI
கிரிப்டோ கரன்சியை கட்டுப்படுத்த வேண்டும்
இதன் பின்னர் கிரிப்டோ நாணயத்தை பரிவர்த்தனை மற்றும் முதலீட்டின் முறையான வடிவமாக உலகம் இறுதியாக ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் புதன்கிழமை ஒரு கூட்டத்தில், 'ரஷ்யா-உக்ரைன் போர் கிரிப்டோகரன்சியைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் காட்டியுள்ளது' என்று கூறினார்.
'உக்ரைன்-ரஷ்யா மோதல், கிரிப்டோகரன்சிகள் உட்பட டிஜிட்டல் நிதி மீதான நடவடிக்கையின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது' என்று அவர் கூறினார். அவர், 'பல பகுதிகளுடன் இந்த வளர்ந்து வரும் வணிகத்தில், நடைமுறையில் இல்லாத ஒழுங்குமுறை கட்டமைப்பு உள்ளது.'
உக்ரேனிய அரசு கிரிப்டோவில் நன்கொடை கோருகிறது
உக்ரேனிய அரசாங்கம் கிரிப்டோவில் நன்கொடை கோரும் நிலையில், சில கிரிப்டோ நாணய வல்லுநர்கள் ரஷ்யா-உக்ரைன் போர் கிரிப்டோகரன்சி எதிர்காலத்தை மாற்றலாம் என்கின்றனர். கிரிப்டோ நிபுணர் அஜித் குரானா கூறுகையில், 'உக்ரேனிய அரசாங்கம் கிரிப்டோ கரன்ஸியில் நிதி பங்களிப்புகளை நாடுகிறது என்பது பிளாக்செயின் அடிப்படையிலான பணத்தின் பயன்பாட்டை உறுதிப்படுத்துகிறது' என்றார்.
மேலும் படிக்க | கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்கிறீர்களா; வருமான வரி விதிகள் கூறுவது என்ன !
கிரிப்டோவின் முக்கியத்துவம் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம்
பிளாக்செயின் சட்ட நிறுவனமான கிரிப்டோ லீகலின் நிறுவனரும் வழக்கறிஞருமான புருஷோத்தம் ஆனந்த் கூறுகையில், சமீபத்திய பொருளாதாரத் தடைகளின் பாதிப்புகளிலிருந்து தப்பிக்க ரஷ்யா கிரிப்டோகரன்ஸிகளைப் பயன்படுத்தத் தொடங்கினால், அதன் பாதிப்பை உலகம் முழுவதும் நாம் பார்க்கலாம். குறிப்பாக அமெரிக்காவும் ஐரோப்பாவும் கிரிப்டோகரன்சி துறையில் கடுமையான விதிகளை கொண்டு வருகின்றன. இது போன்ற இடங்களில் கிரிப்டோ பெரிய இடத்தைப் பெறுவதும் சாத்தியம் என்கின்றனர் நிபுணர்கள். கிரிப்டோ ஒரு மாற்று கட்டண அமைப்பாக வெளிப்படும்.
இந்தியாவின் கண்ணோட்டத்தில் கிரிப்டோ
இந்தியாவில் எதிர்காலத்தில் கிரிப்டோகரன்சிகளின் நிலை என்ன அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பொறுத்து இருக்கலாம். இப்போதைக்கு அரசு மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறது. சமீபத்தில், கிரிப்டோவுக்கு அரசாங்கம் அதிக வரி விதித்துள்ளது. புருஷோத்தம் ஆனந்த் மேலும் கூறுகையில்,, 'பிட்காயின் மற்றும் பிற கிரிப்டோகரன்ஸிகளைப் பயன்படுத்தி பொருளாதாரத் தடைகளின் பாதிப்புகளை தவிர்க்கவோ அல்லது குறைக்கவோ ரஷ்யாவால் முடிந்தால் , RBI இந்தியாவில் கிரிப்டோ கரன்சியை நோக்கி நகர முடியும். கிரிப்டோகரன்சி மசோதாவுக்கான சட்டத்தை கொண்டு வருவது குறித்தும் இந்திய அரசு பரிசீலித்து வருகிறது, இருப்பினும் அந்த திசையில் இதுவரை உறுதியான பணிகள் எதுவும் செய்யப்படவில்லை.
மேலும் படிக்க | கிரிப்டோகரன்சி Ponzi திட்டங்களை விட மோசடியானது: RBI துணை கவர்னர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR