Viral: இரண்டு ஆண்களுடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் பெண்..!

ஒரே வீட்டில் இரண்டு ஆண்களுடன் ஒன்றாக குடும்பம் நடத்தும் பெண்ணின் காதலை கதை இணையத்தில் வைரலாகி வருகிறது..!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 16, 2021, 01:25 PM IST
Viral: இரண்டு ஆண்களுடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் பெண்..! title=

ஒரே வீட்டில் இரண்டு ஆண்களுடன் ஒன்றாக குடும்பம் நடத்தும் பெண்ணின் காதலை கதை இணையத்தில் வைரலாகி வருகிறது..!

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகளாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் (Social Media) மூலம் நம்மிடம் வந்து சேர்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், ஒரே வீட்டில், ஒரு பெண்ணும் இரு ஆண்களும் இணைந்து, ‘அவனுக்கு அவள்’, ‘அவளுக்கு அவன்’, ‘அவனுக்கு அவன்’ என ‘முக்கோண’ காதலில் விழுந்து ஒன்றாக குடும்பம் நடத்தி தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். 

ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது கப்புள்ஸ். அதுவே ஒரு ஆண் இரு பெண்கள் அல்லது இரு ஆண்கள் ஒரு பெண் சேர்ந்து, முக்கோண குடும்ப வாழ்க்கை வாழ்ந்தால் அவர்களுக்கு ‘டிரப்பிள்’ என்று பெயர். அப்படி ஒரு ‘டிராப்பிள்’ ஜோடி தற்போது இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் நடந்திருப்பது அமெரிக்காவில்.

ALSO READ | தனது DSP மக்களுக்கு சல்யூட் அடித்த இன்ஸ்பெக்டர் தந்தை; வைரல் புகைப்படம் இதோ!

அமெரிகாவின் சியாட்டில் நகரில் பிரின்சிஸ் லாலி என்ற பெண்ணும், கன்தெர் மற்றும் லெப்சிசுவான் என்ற இரு ஆண்களும் ‘டிராப்பிள்’ ஆக ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வருகின்றனர். லாலியும் கன்தெரும் மலர் கண்காட்சி ஒன்றில் சந்தித்து நண்பர்களாகி உள்ளனர். பின் நட்பு காதலாக மலர்ந்தது. இவர்கள் இணைந்து குடும்பம் நடத்தி வந்த நிலையில், அவர்கள் கண்களுக்கு பட்டார் லெப்சுவான்.

லெப்சுவான் மீது அவர்கள் இருவருக்கும் காதல் வந்துள்ளது. அதாவது, லாலியும், கன்தெரும் தனித்தனியாக அவர் மீது விரும்பம் கொண்டுள்ளனர். இதனை அவரிடம் இருவரும் தெரிவிக்க, மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டாராம் கன்தெர்.

தற்போது ஒரே வீட்டில் ‘ஒன்றாக’ வசித்து வரும் அவர்கள், தாங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும், தங்களுடன் நான்காவதாக யாரும் ‘இணைய’ விரும்பினால், இணைந்து கொள்ளலாம் எனவும் அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர். தற்போது இந்த விவகாரம் தான், இணையத்தில் ஹாட் டாப்பிக்காக போய்க் கொண்டிருக்கிறது. 90ஸ் கிட்ஸ் வயிறு எரிஞ்சா நாங்க பொறுப்பு இல்ல.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News