Amazon-க்கு போட்டியா Flipkart-ன் 'Freedom Sale' துவங்கியது!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Flipkart-ன் 'Big Freedom Sale' இன்று துவங்குகிறது!

Written by - Mukesh M | Last Updated : Aug 10, 2018, 11:37 AM IST
Amazon-க்கு போட்டியா Flipkart-ன் 'Freedom Sale' துவங்கியது! title=

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Flipkart-ன் 'Big Freedom Sale' இன்று துவங்குகிறது!

பிரபல ஆன்லைன் விற்பனை தளமான Flipkart தனது வாடிக்கையாளரை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் இன்று துவங்கி மூன்று நாட்களுக்கு Flipkart Big Freedom Sale-னை துவங்கியுள்ளது.

3 நாட்கள் நடைபெறும் இந்த சலுகை விற்பனை வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி முடிவடையும்.

இந்த சிறப்பு விற்பனையில், பிரபலமான நிறுவனங்களின் தயாரிப்புகள் மிக்பெரிய அளவிலான தள்ளுபடி விலையில் கிடைக்க வழிவகுத்துள்ளது Flipkart. 

ஸ்மார்ட்போன்கள், மொபைல்கள், டிவிக்கள் மற்றும் உபகரணங்கள், மின்னணுவியல், தளபாடங்கள் மற்றும் பல பொருட்கள் இந்த சிறப்பு விற்பனையில் குறைவான விலையில் கிடைக்கும்.

Citi Bank கடன் அல்லது பற்று அட்டைகளின் மூலம் பொருட்களை வாங்குபவர்களுக்கு 10% சிறப்பு தள்ளுபடியும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Flipkart-க்கு போட்டியாக Amazon-ம் 72-வது சுதந்திரதினத்தை கொண்டாடும் வகையில் தனது Amazon Freedom Sale-னை நேற்றைய தினமே துவங்கிவிட்டது. ஆகஸ்ட் 9 துவங்கி ஆகஸ்ட 12 வரை நடைப்பெறும் இந்த Freedom Sale-ல் ஸ்மார்ட்போன்கள், மொபைல்கள், டிவிக்கள் மற்றும் உபகரணங்கள், மின்னணுவியல், தளபாடங்கள் மற்றும் பல பொருட்கள் இந்த சிறப்பு விற்பனையில் குறைவான விலையில் கிடைக்கும்.

மேலும் State Bank கடன் அல்லது பற்று அட்டைகளின் மூலம் பொருட்களை வாங்குபவர்களுக்கு 10% சிறப்பு தள்ளுபடியும் கிடைக்கும். உடனடி பணத்திரும்ப பெருதல் வசதியும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News