கார்த்திகை பௌர்ணமியின் சிறப்பம்சங்கள் என்ன? தீபம் ஏற்றி வழிபட்டால் புண்ணியம்

கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நட்சத்திரத்தில் பெரும்பாலும் அந்த மாதத்திற்கான பெளர்ணமி வரும்.

Last Updated : Nov 29, 2020, 11:46 AM IST
    1. சிவபெருமானே மலை ரூபமாக அமைந்த திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றுவது மிக் கோலாகலமாகக் கொண்டாட்டத்தோடு வழிபடப்படுகிறது.
    2. கார்த்திகை பெளர்ணமி அற்புத நாளில் வீடுகள் மற்றும் ஆலயங்கள் என எல்லா இடங்களிலும் தீபம் ஏற்றப்படுகிறது.
    3. கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நட்சத்திரத்தில் பெரும்பாலும் அந்த மாதத்திற்கான பெளர்ணமி வரும்.
கார்த்திகை பௌர்ணமியின் சிறப்பம்சங்கள் என்ன? தீபம் ஏற்றி வழிபட்டால் புண்ணியம் title=

பெளர்ணமி நாள் என்றால் முழு நிலவு நாள். பெளர்ணமியில் கிட்டத்தட்ட 108 வகைகள் இருப்பதாகவும், அவற்றின் தன்மைகளுக்கேற்ப பல்வேறு விரத வழிபாட்டு முறைகள் உண்டு என்றும் சித்தர்கள் விளக்கம் அளித்துள்ளனர். பௌர்ணமி நாளானது பகலில் தொடங்கி இரவில் முடிவது, பாதி பகல்- பாதி இரவாக அமைவது, இரவில் தொடங்கி பகலில் முடிவது என்று பௌர்ணமியில் பல்வேறு வகைகள் இருக்கின்றன.

பூமியிலிருந்து வானளாவ எழுந்து நின்ற தெய்வ வடிவங்களின் தரிசனத்தை பெளர்ணமி (Pournami) நாளன்று பெறுவதன் காரணமாக, ஒருவரது உள்ளுணர்வு ரீதியான ஆன்மிக தன்மைகள் மேம்படுத்தப்படும் என்று சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ALSO READ | உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக..!!!

இத்தகைய விஸ்வ ரூப மூர்த்திகள் இல்லாத ஊர்களில் இருப்பவர்கள் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவரும் ஆலமரம், அரசமரம், வேப்பமரம் போன்ற பழமையான விருட்சங்களை பிரதட்சிணம் செய்து வழிபட்டு வரலாம். மேலும், பெளர்ணமி நாளின் விரதமிருந்து ஆலய தரிசனம் செய்வது பல நன்மைகளை அளிப்பதாக குறிப்பிடப்படுகிறது. 

பெளர்ணமி தினத்தன்று அன்னை தேவி பராசக்தி வழிபடுவதும், சத்ய நாராயணன் பூஜை (Satyanarayan Puja) செய்வதும் மிகவும் சிறப்பானதாகும். இந்த பெளர்ணமி ஒளிமயமான தினத்தில் அம்பிகைக்கும் பூஜைகள் செய்து வழிபாட்டால் தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

பெளர்ணமி நாளில் வீட்டிலும், கோயிலிலும் விளக்கேற்றி வழிபாடு செய்வதன் மூலம் மிகச் சிறந்த பலன்களை பெற முடியும். அதுவும் கார்த்திகை மாதம் வரும் பௌர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்தது. 

ALSO READ | தீபத் திருநாள் கார்த்திகையின் அடிப்படை வரலாறு தெரியுமா?

கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நட்சத்திரத்தில் பெரும்பாலும் அந்த மாதத்திற்கான பெளர்ணமி வரும். அன்றைய தினத்தில் சிவபெருமான் ஜோதிப்பிழம்பாக காட்சி தருவது தான் திருக்கார்த்திகை தீபமாக திருவண்ணாமலை மீது மகா தீபமாக ஏற்றப்படுகிறது. கார்த்திகை பெளர்ணமி (Karthigai Pournami) அற்புத நாளில் வீடுகள் மற்றும் ஆலயங்கள் என எல்லா இடங்களிலும் தீபம் ஏற்றப்படுகிறது.

சிவபெருமானே மலை ரூபமாக அமைந்த திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபம் (Karthigai Deepam) ஏற்றுவது மிக் கோலாகலமாகக் கொண்டாட்டத்தோடு வழிபடப்படுகிறது. நம் வீட்டில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட மனக்கவலைகள் நீங்கும். கண் கோளாறு தீரும். அனைத்து வகையில் நன்மை உண்டாகும். 

ALSO READ | ஆஞ்சநேயருக்கு வெற்றிலை, வடை மாலை சார்த்துவது ஏன் தெரியுமா?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3lo

Trending News