பிரதமர் நரேந்திர மோடியின் மாத சம்பளம் மற்றும் செலவுகள் எவ்வளவு தெரியுமா?

Narendra Modi’s salary: இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்று சாதனை படைத்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Jun 19, 2024, 02:34 PM IST
  • மூன்றாவது முறை பதவியேற்றுள்ள மோடி.
  • அவரின் சொத்து மதிப்பு ரூ. 3 கோடி ஆகும்.
  • மாதம் ரூ. 1.66 லட்சம் சம்பாதிக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் மாத சம்பளம் மற்றும் செலவுகள் எவ்வளவு தெரியுமா? title=

Narendra Modi’s salary: நரேந்திர மோடி அவர்கள் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். இந்திய வரலாற்றில் நேருவிற்கு பிறகு இரண்டாவது முறையாக இந்த சாதனையை நரேந்திர மோடி நிகழ்த்தியுள்ளார். பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடி மாதம் ரூ.1.66 லட்சம் சம்பளமாக பெறுகிறார். மேலும் கூடுதல் சலுகையாக மத்திய அரசின் சிறப்புப் பாதுகாப்புக் குழு (SPG), இலவச வீடு ஆகியவற்றை பெறுகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி 272 இடங்களில் வெற்றி பெற்றதன் மூலம் கூட்டணி முறையில் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க | உலகின் டாப் பணக்காரர்களில் எலோன் மஸ்க் நம்பர் 1: பட்டியலில் எவ்வளவு இந்தியர்கள்?

பிரதமர் மோடியின் சம்பளம் என்ன?

பிரதமராக நரேந்திர மோடியின் செயல்பாடுகள் மிகவும் முக்கியமானவை. இந்தியாவிலேயே உயர்ந்த பதவி என்றால் அது பிரதமர் பதவி தான். இத்தகைய முக்கிய பொறுப்பில் உள்ள மோடிக்கு ஒவ்வொரு மாதமும் அடிப்படைச் சம்பளம் ரூ.50000, செலவுக் கொடுப்பனவு ரூ.3000, நாடாளுமன்றக் கொடுப்பனவு ரூ.45000, தினசரி கொடுப்பனவு ரூ.2000 ஆகியவை கிடைக்கும். இந்த முறை தேர்தலில் போட்டியிட்ட போது தனது சொத்து விவரங்களை பகிர்ந்து இருந்தா மோடி. அதில் தன்னிடம் ரூ. 3.02 கோடி சொத்து உள்ளதாக காண்பித்துள்ளார். 

பிரதமருடன் ஒப்பிடும்போது ஜனாதிபதியின் மாதம் சம்பளம் அதிகம். இந்திய குடியரசு தலைவர் மாதம் ரூ. 5 லட்சம் சம்பளம் பெறுகிறார், அதே சமயம் இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் மாதம் ரூ. 4 லட்சம் சம்பளம் பெறுகிறார். மேலும் நாடாளுமன்றத்தில் உள்ள ஒவ்வொரு எம்பிகளும் மாதம் அடிப்படை சம்பளமாக ரூ.1 லட்சம் பெறுகிறார்கள். மாத சம்பளம் மட்டுமின்றி பிரதமர் மோடி பல சலுகைகளையும் அனுபவிப்பார். வீடு, பாதுகாப்பை தவிர ஏர் இந்தியா ஒன் - பிரத்யேக விமானம் உள்ளது. மேலும் Mercedez-Benz S650 புல்லட் புரூப் காரும் பயன்பாட்டில் உள்ளது. ஒருவர் இந்திய நாட்டின் பிரதமாக இருந்து ஓய்வு பெற்றாலும் அவருக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இலவச தங்குமிடம், மின்சாரம், தண்ணீர் மற்றும் SPG பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

மற்ற நாட்டு தலைவர்கள் எவ்வளவு சம்பளம் பெறுகின்றனர்?

மற்ற நாடுகளை ஒப்பிடும் போது சிங்கப்பூர் பிரதமர் அதிக சம்பளம் பெறுகிறார். லீ சியென் லூங்கிடம் இருந்து பொறுப்பேற்ற லாரன்ஸ் வோங் ஒரு வருடத்திற்கு ரூ 18.37 கோடி சம்பளம் பெறுகிறார். அவரை தொடர்ந்து அதிக சம்பளம் வாங்கும் நபராக ஹாங்காங்கின் ஜான் லீ கா-சியூ இரண்டாவது இடத்தில் உள்ளார். அவர் ஆண்டுக்கு ரூ 5.61 கோடி சம்பளம் பெறுகிறார். சுவிட்சர்லாந்த் தலைவர் ஆண்டுக்கு ரூ 4.13 கோடி, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆண்டுக்கு ரூ. 3.34 கோடி சம்பளமாக பெறுகின்றனர்.

மேலும் படிக்க | 8th Pay Commission மிகப்பெரிய அப்டேட்: அரசுக்கு வந்த கோரிக்கை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News