கர்ம காரியங்கள் செய்யப்படும் அருள்மிகு சங்கமேசுவரர் திருக்கோவில்!

ஈரோடு மாவட்டம் பவானி என்னும் ஊரில் உள்ளது பவானி சங்கமேசுவரர் கோவில். கூடுதுறையின் கரையில் அமைந்துள்ள பவானி சங்கமேசுவரர் கோயில் முகவும் பிரசித்தி பெற்றது விளங்குகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 8, 2021, 02:21 PM IST
கர்ம காரியங்கள் செய்யப்படும் அருள்மிகு சங்கமேசுவரர் திருக்கோவில்!  title=

ஈரோடு மாவட்டம் பவானி என்னும் ஊரில் உள்ளது பவானி சங்கமேசுவரர் கோவில். கூடுதுறையின் கரையில் அமைந்துள்ள பவானி சங்கமேசுவரர் கோயில் முகவும் பிரசித்தி பெற்றது விளங்குகிறது. 

வரலாறு
இக்கோவிலின் அம்பிகை (Lakshmiவேதநாயகியின் பெருமையை விளக்க வில்லியம் காரோ என்ற ஆங்கிலேயர் அளித்த தந்தக் கட்டில் ஒன்று சான்றாய்த் திகழ்கிறது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டு வந்த காலத்தில் வில்லியம் காரோ என்பவர்தான் பவானி பகுதிக்கு கலெக்டராக இருந்தார். 

ALSO READ | நிதி தடுமாற்றத்தில் இருந்து தப்பிக்க? இந்த விஷயங்களைச் செய்யுங்கள்

அம்பிகை வேதநாயகியின் (Deviபெருமையையும் அழகையும் மக்கள் வியந்து பேசுவது கண்ட காரோ தாமும் அம்பிகையைக் காண விரும்பினார். இந்துக்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்லலாம் என்பதால், மதில் சுவரில் சாளரம் பொன்று மூன்று துளைகளைச் செய்து காரோ அதன் மூலம் அம்பிகையைக் காண வழி செய்தனர். காரோவும் அம்பிகையை அச்சாளரத்தின் மூலம் தினந்தோறும் கண்டு வழிபட்டு வந்தார். அந்தத் துளைகள் இன்றும் உள்ளன.

ஒரு முறை காரோ தனது இல்லத்தின் மாடியில் உறங்கிக் கொண்டிருந்த போது அம்பிகை வேதநாயகியைப் போன்று வடிவுடைய பெண் ஒருத்தி அவரைத் தட்டி எழுப்பி கையைப் பற்றி விரைவாக வெளியே அழைத்துச் சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டு திடுக்கிட்டு விழித்து எழுந்த காரோ பரபரப்புடன் மாடியிலிருந்து கீழே ஓடினார். அடுத்த நிமிடமே காரோ குடியிருந்த இல்லத்து மாடி இடிந்து கீழே விழுந்தது. தான் பிழைத்தது அம்பிகையின் அருள் என்று போற்றி, அம்பிகைக்கு தந்தத்தால் ஆன கட்டில் செய்து காணிக்கையாக அம்பிகைக்கு அளித்தார். அதில் தனது கையொப்பமும் இட்டார். இச்சம்பவம் நடந்தது 1804ம் வருடம் ஜனவரி மாதம் 11ம் நாள் ஆகும்.

மூலவர், பிற சன்னதிகள்
சுயம்புலிங்க மூலவர் சங்கமேஸ்வரர் ஆவார். இறைவி வேதநாயகி அல்லது வேதாம்பிகை என்றழைக்கப்படுகிறார். இக் கோயிலில் ஆதிகேசவப் பெருமாளுக்கும் சௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்து சைவ, வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக விளங்குகிறது. இறைவியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அதன் வலப்பக்கம் அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ள சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. அதற்கடுத்து மூலவர் சன்னதி உள்ளது. அருகில் ஜ்வரஹரேஸ்வரர் திரு உருவம் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் காணப்படுகிறது.

ALSO READ | ‘காயத்திரி’ மந்திரம் சொல்வதால் நடக்கும் அதிசயம் தெரியுமா?...

திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்தபோது அவருடைய அடியார்களை சுரநோய் பீடிக்க, இங்குள்ள ஜ்வரஹரேஸ்வரரை வழிபட்டு அவர்கள் நோய் நீங்கப் பெற்றார்கள் என கூறப்படுகிறது. கோயிலின் தெற்குப் பக்கம் 63 நாயன்மார்கள் திரு உருவங்கள் உள்ளன.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News