1 நாள் செல்போன் உபயோகிக்காமல் இருந்தால் என்ன ஆகும்? ‘இந்த’8 நல்ல விஷயம் நடக்கும்!

நம் வாழ்வில் மொபைல் போன் ஒரு அங்கமாக மாறிவிட்டது. இதை, ஒரு நாள் உபயோகிக்கவில்லை என்றால் என்ன ஆகும் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Oct 14, 2024, 04:43 PM IST
  • ஒரு நாள் செல்போன் உபயோகிக்கவில்லை என்றால் என்ன ஆகும்?
  • இதனால் நடக்கும் நல்ல விஷயங்கள் என்ன?
  • எல்லாத்தையும் இங்க தெரிஞ்சிக்கோங்க!!
1 நாள் செல்போன் உபயோகிக்காமல் இருந்தால் என்ன ஆகும்? ‘இந்த’8 நல்ல விஷயம் நடக்கும்! title=

தினசரி மொபலை் போன் உபயோகிப்பது என்பது நம் வாழ்வின் பெரிய அங்கமாக மாறிவிட்டது. பலருக்கு, அவர்களின் தாெழிலும், வருமானமும் தங்களது செல்போனை நம்பித்தான் இருக்கிறது. ஒரு இடத்தில் இருந்து நமது கவனத்தை திருப்ப போனை உபயோகிக்க ஆரம்பித்தால் கடைசியில் அதுவே நமக்கு பெரிய கவனச்சிதறலாக அமைந்து விடுகிறது. ஒரு நாள் கையில் போன் இல்லாமல் இருந்து எப்படி இருக்கும் என எப்போதாவது யோசித்துண்டா? ஒரு நாள் போன் உபயோகிக்கவில்லை என்றால் என்னென்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? இங்கு அது குறித்து பார்ப்போம். 

1.கவனம் அதிகரிக்கும்:

கையில் இருக்கும் செல்போன் என்பது நமக்கு பெரிய கவனச்சிதறலாக அமைந்திருக்கிறது. சாப்பிடும் போது, உறங்க செல்வதற்கு முன்பு, ஏதேனும் பொறுப்பான வேலை செய்யும் போது, முக்கியமான இடத்தில் இருக்கும் போது என எங்கு பார்த்தாலும் இதை எடுத்துக்கொண்டே செல்வோம். அது ஒரு நாள் கையில் இல்லை என்றால், நாம் செய்யும் வேலைகளில் நமது கவனம் அதிகரிக்கும். செய்வதை திறம்படவும் செய்ய இயலும். 

2.நல்ல உறக்கம்:

இன்றைய காலக்கட்டத்தில் பலர் ஏங்கி அலையும் விஷயமாக இருக்கிறது, நல்ல உறக்கம். 7-8 மணி நேர தூக்கம் என்பதே இங்கு பலருக்கு கனவாகி போய்விட்டது. ஒரு நாள், செல்போனின் தொல்லை இன்றி இருந்தோம் என்றால் நமது தூக்க நிலை சரியாக சிறிதேனும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

3.உரையாடல்கள்:

பலர் இன்று, தங்களை சுற்றி சரியான மக்கள் இருந்தும் அவர்களுடன் உரையாட முடியாமல் இருக்கின்றனர். சரியாக பேச முடியாததால் அவர்களுக்குள் இருக்கும் உறவும் ஏனோதானோ என இருக்கிறது. இதனால், உங்களை சுற்றி இருப்பவர்களுடன் சரியாக உரையாட செல்போன் அற்ற சமயத்தை சரியாக உபயோகித்து கொள்ளலாம். 

4.நினைவாற்றல்:

செல்போன் கையில் இருக்கும் போது, அருகில் இருப்பவர் என்ன பேசுகிறார் என்பது கூட நம் மனதில் பதியாது. நினைவுகள் எங்கோ இருப்பது போல இருக்கும். அது பதிந்தாலும் பல சமயங்களில் மறந்து விட வாய்ப்புள்ளது. இதனால், நாம் கையில் ஒரு நாள் செல்போன் இல்லாமல் இருக்கும் போது நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதனை உற்று நோக்குவோம். இதனால் சில புது அனுபவங்களும் கிடைக்கிறது.

5.மனச்சோர்வு மற்றும் பதற்றத்தை குறைக்கலாம்:

சமூக வலைதளங்களில் இருந்து பிரேக் எடுப்பது உங்களது மனச்சோர்வு மற்றும் பதற்றத்தை குறைக்கலாம். காரணம், செல்போன் மூலமாக நாம் காணும் விஷயங்களும், கேட்கும் விஷயங்களும் மனப்பதற்றத்தை அதிகரிப்பதற்கு பெருங்காரனமாக அமைகின்றன. எனவே, அவற்றை ஒரு நாள் உபயோகிக்காமல் இருந்தால் அன்று ஏற்படும் மனச்சோர்வு குறைவாகலாம். 

மேலும் படிக்க | தினமும் 8 மணி நேரம் ஏசி-யில் உட்கார்ந்தால் என்ன ஆகும் தெரியுமா?

6.படைப்பாற்றல்:

கையில் போன் இல்லாத போது, எந்த சமூக வலைதளத்தையும் செக் செய்ய வேண்டும் என்று தோன்றாது. இதனால், உங்கள் படைப்பாற்றல் அதிகரிக்கும். புதுப்புது யோசனைகள் பிறக்கும்.

7.உற்பத்தி திறன் அதிகரிக்கும்:

24 மணி நேரத்திற்கு நீங்கள் செல்போனை உபயோகிக்கவில்லை என்றால், நீங்கள் செய்யும் வேலைகள் அதிகரிக்காது. ஆனால், அந்த வேலையை நீங்கள் செய்யும் முறை மெருகேறும். அது நீங்கள் செய்யும் தனிப்பட்ட வேலையாக இருந்தாலும் சரி, தொழில் ரீதியான வேலையாக இருந்தாலும் சரி. நீங்களே வித்தியாசத்தை உணருவீர்கள்.

8.உடற்பயிற்சிகள்:

கையில் போன் இல்லாத சமயத்தில் உடலுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று தோன்றும். வாக்கிங் செல்வது உடற்பயிற்சி செய்வது போன்றவற்றால் உடலுக்கு நல்லது. 

மேலும் படிக்க | ஐஸ் வாட்டரில் முகம் கழுவுவதால் என்ன ஆகும்? இத தெரிஞ்சிக்கோங்க..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News