Vinesh Phogat weight gain Reason : பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத் எடை கூடுதலாக இருந்ததற்காக, இறுதிப் போட்டிக்கு முன்பாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது ஒட்டுமெத்த இந்தியாவுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வினேஷ் போகத்துக்கு எடை கூறியதற்கான காரணத்தை அவரின் மருத்துவர் டின்ஷா பர்திவாலா கூறியுள்ளார். "மல்யுத்த வீரர்கள் குறைவான எடை பிரிவில் போட்டியிடுவதற்காக பொதுவாகவே அவர்கள் கூடுதலாக எடையை குறைப்பது வழக்கம். அதற்காக குறைந்த உணவு மற்றும் தண்ணீரையே எடுத்துக் கொள்வார்கள்.
இந்த டையட்டில் அவர்களின் எடை சீக்கிரம் குறையத் தொடங்கும். போட்டிக்கு முன்பாக எடை கூடுவதற்கான பயிற்சியை செய்வார்கள். ஏனென்றால் எடை கூடுதலாக குறைக்கும்போது பலவீனமாகவும், சோர்வாகவும் இருப்பார்கள். அப்போது அவர்களால் போட்டியாளருடன் வலிமையாக எதிர்த்து போட்டியிட முடியாது. எனவே போட்டிக்கு முன்பாக தகுந்த எடையை அடையும் வகையில் உடற்பயிற்சியும், டையட்டும் இருக்கும். போட்டியின் இடையேவும் ஆற்றலுக்காக அவர்களுக்கு தண்ணீர், உணவு வழங்கப்படும். அதனால் எடை கூடுவதற்கு வாய்ப்பு இருந்தாலும் தொடர் கண்காணிப்பில் மல்யுத்த வீரர்கள் தாங்கள் பங்கேற்ற பிரிவில் இருக்க வேண்டிய எடைக்கு ஏற்ப அதனை பராமரிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.
வினேஷ் போகத்துக்கும் எடை அதிகரிக்கும் என எங்களுக்கு தெரியும். அதிகபட்சம் 1.5 கிலோ வரை கூடும், அதனை குறைத்துவிடலாம் என திட்டமிட்டிருந்தோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததைவிட வினேஷ் போகத்துக்கு 2.7 கிலோ வரை அதிகரித்துவிட்டது. இருப்பினும் இதனை குறைக்க அனைத்து முயற்சிகளும் எடுத்தோம். கடைசி வரை எங்களால் 100 கிராம் எடையை குறைக்க முடியவில்லை. 50 கிலோ இருக்க வேண்டிய இடத்தில் வினேஷ் போகத் 100 கிராம் அதிகமாக இருந்ததற்காக ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்" வினேஷ் போகத் மருத்துவர் டின்ஷா பர்திவாலா விளக்கமளித்துள்ளார்.
மேலும் படிக்க | மொபைலை அதிகம் பயன்படுத்தினால் உடல் எடை அதிகரிக்குமா? ஆய்வுகள் சொல்வது என்ன?
திடீர் உடல் பருமனுக்கு வழிவகுக்கும் காரணங்கள் :
சாப்பிடாமல் இருந்தல்
பெண்களின் எடை அதிகரிப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் சாப்பிடாமல் இருப்பதும் ஒன்று. ஹார்மோன் பிரச்சனை இருக்கும் பெண்களுக்கு சாப்பிடாமல் இருக்கும்போது சீக்கிரம் எடை அதிகரித்துவிடும். தூக்கமும் இல்லை என்றால் உடல் எடை அதிகரிப்பு நிச்சயம் இருக்கும். ஏனென்றால் ஹார்மோன் சமநிலையில் மாற்றம் ஏற்பட்டு எடை கூடுதலாகும்.
பதற்றம்
கவலை மற்றும் மனச்சோர்வு ஆகியவையும் வளர்சிதை மாற்றத்தின் சமநிலையை பாதிக்கிறது. அப்போது, உணவு விஷயத்தில் கவனமாக இருக்க மாட்டார்கள். இது தூக்கமின்மையை ஏற்படுத்தி ஒரே நாளில் எடை அதிகரிக்க வழிவகுக்கும். எனவே, பதற்றத்தைத் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும்.
தைராய்டு
தைராய்டு சுரப்பிகள் சரியாகச் செயல்படாத பெண்களுக்கு திடீரென உடல் பருமன் ஏற்படும். வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்தும் தைராய்டு தான் கலோரிகளை எரிக்க வேலை செய்கிறது. அதுவே பிரச்சனையாக இருக்கும்போது உடல் எடை அதிகரிக்கும்.
PCOS
PCOS என்பது பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் கோளாறு ஆகும். இதில், ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆண்ட்ரோஜன் ஹார்மோன்கள் சமநிலையற்றதாக மாறும். இதன் காரணமாக, பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய், முகப்பரு மற்றும் முகத்தில் முடி வளர்ச்சி ஆகியவை வரும். இது இன்சுலின் செயல்பாட்டில் குறுக்கிடுவதால் எடை அதிகரிக்கும்.
மருந்து மாத்திரைகள்
உடல் உபாதைகளுக்கு பெண்கள் மருந்துகளை உட்கொள்வதால் எடை திடீரென அதிகரிக்கும். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகள் முக்கிய காரணமாக இருக்கின்றன. குறிப்பாக, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் மனச்சோர்வுக்கான மருந்துகள் உடல் எடையை அதிகரிக்கும்.
மேலும் படிக்க | 5 மாசத்துல உங்கள் வாழ்க்கை 5 வருஷம் முன்னாடி போய்டும்! ‘இதை’ பண்ணுங்க!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ