சென்னை தலைமைச் செயலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.
DMK working President MK Stalin, who was holding a protest outside Tamil Nadu secretariat over #SterliteProtests in #Thoothukudi, has been detained by the police. Several others detained too. #TamilNadu pic.twitter.com/Qr3tMyVl6W
— ANI (@ANI) May 24, 2018
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக முதலமைச்சரை சந்திக்க அனுமதி கேட்டு அவரது அறை முன்பு அமர்ந்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
A clash between DMK workers & police took place outside Tamil Nadu secretariat, while the former were protesting over #SterliteProtests in #Thoothukudi. The workers were blocking the vehicle in which MK Stalin & other party leaders were being taken. #TamilNadu pic.twitter.com/v7pXixraEs
— ANI (@ANI) May 24, 2018
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று முன்தினம் 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 13 உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். குருவியை சுடுவது போல் போலீஸார் துப்பாக்கியால் சுட்டுள்ளதால் அனைவரும் கொந்தளிப்பில் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று மீண்டும் துப்பாக்கிச் சூடும் , தடியடியும் நடத்தப்பட்டது. மக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகளும் துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஆட்சியரும், மாவட்ட எஸ்.பி.யும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இன்று தமிழ்நாடு வணிகர் சங்கம் இன்று கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்த வணிகர் சங்கம் முடிவு செய்துள்ளதை அடுத்து இன்று காலை முதல் கடைகள் மூடப்பட்டு கிடந்தன. மேலும் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய திமுகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. சுமார் 500-க்கும் மேற்பட்ட திமுகவினர் தலைமை செயலகம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தர்ணாவில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை போலீசார் குண்டுக்கட்டாக வெளியேற்றினர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.