'2.0' படத்தின் பர்ஸ்ட் லுக் நவம்பர் 20-ம் தேதி வெளியீடு!!

Last Updated : Nov 16, 2016, 03:21 PM IST

Trending Photos

'2.0' படத்தின் பர்ஸ்ட் லுக் நவம்பர் 20-ம் தேதி வெளியீடு!! title=

'2.0' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பையில் பிரம்மாண்டமாக விழா நடைபெற இருக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன், சுதன்ஷூ பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் '2.0. லைக்கா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறது. மேலும் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா அதி நவீன தொழில்நுட்பத்தில் மும்பையில் உள்ள யாஷ்ராஜ் ஸ்டூடியோவில் நடைபெற இருக்கிறது. மாலை 5 மணிக்கு இவ்விழா நடைபெற இருக்கிறது. இவ்விழாவில் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், அக்‌ஷய்குமார், ஏ.ஆர்.ரஹமான், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். 

மும்பை விழாவைத் தொடர்ந்து தமிழகத்தில் பிரம்மாண்டமான விழா ஒன்றுக்கு திட்டமிட்டு வருகிறது தயாரிப்பு நிறுவனம். இவ்விழா நேரலை லைக்கா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யு-டியூப் பக்கத்தில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது

Trending News