நடிகர் அஜித் என்ற பெயரே எப்போதும் மாஸ் தான். தற்போது போனி கபூர் தயாரிப்பில், எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வருகிறது “வலிமை” திரைப்படம். திரைப்படம் எப்போது வெளிவரும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அஜித்துக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி அனைவருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகையான ஹியூமா குரேஷி நடிக்கிறார். வலிமை படத்தின் டீசர் ரசிகர்களால் வடிவமைக்கப்பட்டு வெளியாகியிருந்தது. மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்த டீசர் அனைவரையும் அசத்தியது.
கொரோனா காரணமாக நின்றுபோன இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பலத்த கட்டுப்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கையுடன் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. அதில் கலந்துக் கொண்ட நடிகர் அஜித்துக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வந்தது. ஒரு ஸ்டன்ட் காட்சியில் அஜித் நடித்துக் கொண்டிருந்தார். காட்சியின் படி, மின்னல் வேகத்தில் அஜித் வரவேண்டும். படபிடிப்பின் போது வேகமாக வந்த அஜித் நிலை தடுமாறி ரோட்டில் விழுந்தது விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் நின்றதும் அவரது உடலின் பல இடங்களிலும் ரத்தம் சொட்டியதாம்!
வழக்கமாக ரிஸ்கான காட்சிகளில் டூப் போடுவார்கள். ஆனால், தொழிலில் மிகவும் கவனமுள்ள அஜீத், டூப் போடாமல் நடிப்பவர்களில் ஒருவர். இவ்வளவு பெரிய நடிகர் எந்த பந்தாவும் இல்லாமல் இருப்பதைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர்.
தற்போது சூரரைப்போற்று திரைப்படம் மிகவும் வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்த படத்தின் இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் தல அஜித்குமார் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
ஆனால் அஜீத் தற்போது வலிமை திரைப்படத்தை முடித்த பிறகே அடுத்த படத்தில் கவனம் செலுத்தவிருப்பதால், சுதாவின் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பதற்கு சற்று காலம் பிடிக்கும் என்பதால், சுதா கொங்கரா, கார்த்தியை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த திரைப்படம் குறுகிய காலத்திலேயே முடிந்துவிடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR