மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரம் பேருக்கு இன்று நடிகர் பிரசாந்த் நேரில் வந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பெண்கள் செல்ஃபி எடுக்க வேண்டும் என கேட்டவுடன் பெண்களிடம் இருந்து நடிகர் பிரசாந்த் செல்போனை வாங்கி சிரித்த முகத்துடன் செல்பி எடுத்துக் கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உதவி செய்வது மகிழ்ச்சி அளிப்பதாக மழை வெள்ளத்தில் மீட்பு பணிகளை தமிழக அரசு காவல்துறை சிறப்பாக செய்தது என அவர் பாராட்டினார். தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நடிகர் பிரசாந்த் சார்பில் இன்று தூத்துக்குடி ஏஆர்எஸ் மஹாலில் வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் பிரசாந்த் கலந்து கொண்டு நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு அரிசி உடைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் படிக்க | தளபதி 69 படத்தின் இயக்குனர் இவரா? வெளியானது அப்டேட்!
இதை தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசும்போது, பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து உதவி செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது கடவுள் அந்த பாக்கியத்தை அளித்திருக்கிறார் இதேபோன்று எல்லாரும் உதவி செய்வார்கள் இந்த மழை வெள்ளத்தில் தமிழக அரசு மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் தங்கள் குடும்பங்களை கூட மறந்து சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். நமது நாடு மிகப்பெரிய நாடு அடுத்த பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக குளங்களை தூர்வார வேண்டும் மேலும் ஒவ்வொரு பேரிடர் காலத்தில் நாம் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம் இனிமேல் இதே போல் நடக்காமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். சமீபத்தில் நடிகர் விஜய் தூத்துக்குடி பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பொருட்களை கொடுத்து உதவினார். விஜய் மற்றும் பிரசாந்த் இருவரும் the greatest of all time படத்தில் நடித்து வருகின்றனர்.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு குறு தொழில் புரிவோருக்கு கடன் உதவி மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகளை கனிமொழி எம்பி வழங்கினார். இதனை தொடர்ந்து வெள்ள நிவாரண பணிகள் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக சிறு குரு தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டது இந்த தொழில்களை மீட்டெடுக்கும் வகையில் மாவட்ட தொழில் மையம் சார்பில் 32 நபர்களுக்கு சுமார் 72 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடனு உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராளுமன்ற திமுக குழு துணை தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி 32 நபர்களுக்கு சுமார் 72 லட்ச ரூபாய் மதிப்பிலான சிறு குறு கடன் உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து மகளிர் திட்டத்தின் கீழ் 22 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தொழில் தொடங்க 27 லட்ச ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளுக்கான ஆணைகளை எம்பி கனிமொழி வழங்கினார். தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள நிவாரண பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது இதிலும் கனிமொழிய எம்பி கலந்து கொண்டு அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க | நான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன் - நடிகர் விஷால்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ