பணியாளர் வீட்டுத் திருமணம் - குடும்பத்தில் ஒருவராக சீயான் விக்ரம்

தனது வீட்டில் 40 ஆண்டுகளாக பணியாற்றும் ஊழியரின் இல்லத் திருமண விழாவில், நடிகர் விக்ரம் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.  

Written by - Sudharsan G | Last Updated : Sep 12, 2022, 04:07 PM IST
  • விக்ரம் நடிப்பில் சமீபத்தில் கோப்ரா திரைப்படம் வெளியானது.
  • பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம் நடித்துள்ளார்.
  • ஆதித்ய கரிகாலன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.
பணியாளர் வீட்டுத் திருமணம் - குடும்பத்தில் ஒருவராக சீயான் விக்ரம் title=

ரசிகர்களின் அன்பிற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கும் நட்சத்திரங்களில் முன்னிலையில் இருப்பவர் சீயான் விக்ரம். ரசிகர்களையே குடும்ப உறவாக கருதும் விக்ரம், அவருடன் பணியாற்றும் சக  ஊழியர்களின் குடும்பத்தில் நடைபெறும் சுப வைபங்களிலும் கலந்துகொள்வதும் வழக்கம். 

அந்த வகையில், நடிகர் விக்ரமின் வீட்டில் பல ஆண்டுகளாக ஒளிமாறன் - மேரி தம்பதி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். ஒளிமாறன் உடல்நலக்குறைவு காரணமாக காலமாகிவிட்டார்.

மேலும் படிக்க | மீண்டும் தாத்தாவான ரஜினி! பேரனுக்கு இப்படி ஒரு பெயரா?

இந்நிலையில், ஒளிமாறன் - மேரி ஆகியோரின் மகனான தீபக்கிற்கும், வர்ஷினி என்பவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, திருப்போரூர் கந்தசாமி கோயிலில் தீபக் - வர்ஷினியின் திருமணம் இன்று (செப். 12) நடந்தது. இந்த திருமண விழாவில், நடிகர் விக்ரம் கலந்துகொண்டு, தாலி எடுத்துக்கொடுத்து மணமக்களை வாழ்த்தினார். அப்போது, விக்ரமின் ரசிகர்களும், ரசிகர் மன்ற நிர்வாகிகளும் உடனிருந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். vikram, விக்ரம்

வழிமேல் விழிவைத்து காத்திருக்கும் விக்ரம்

விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோப்ரா திடைப்படம் முதலில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. முதலில், படத்தின் நீளம் பிரச்சனையாக கூறப்பட்ட நிலையில், படத்தில் அரைமணி நேரத்திற்கு காட்சிகள் நீக்கப்பட்டன. 

இருப்பினும், இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே விக்ரமின் திரைப்படங்கள் வணிக ரீதியாக சுணக்கம் காட்டி வருவதால், விக்ரமும் தொடர்ந்து வித்தியாசமான கதைகள் தேர்வு செய்து தனது முழு பங்களிப்பையும் அளித்துவருவதாக கூறப்படுகிறது. vikram, விக்ரம்

அந்த வரிசையில், கோலிவுட்டில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் விக்ரம் நடித்துள்ளார். 'ஆதித்ய கரிகாலன்' என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள விக்ரம், பொன்னியின் செல்வன் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் படத்தில் நயன்தாராவா? வைரலாகும் புகைப்படம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News