சில திரைப்படங்கள் திரை அரங்குகளை விட்டு வெளியே வந்தவுடனேயே நம் மனதில் இருந்து விலகி விடுகின்றன. சில வீடு வரை வருகின்றன. சில படங்களோ நம மனங்களில் வீடு கட்டி அமர்ந்து விடுகின்றன.
அப்படி ஒரு படம்தான் 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் (Malayalam) வெளிவந்த ‘திருஷ்யம்’ (Drishyam). ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில், குடும்பத்தில் நடக்கும் ஒரு அசாதாரண நிகழ்வால், அக்குடும்பமே செய்வதறியாமல் தவிக்கிறது, குழம்புகிறது. பின்னர், அந்த குடும்பம் எவ்வாறு சமாளித்து அந்த பிரச்சனையை எதிர்கொள்கிறது என்பதுதான் இப்படத்தின் கதை. மிக எளிமையான முறையில் எடுக்கப்பட்ட ஒரு அற்புதமான படம்.
இன்று இப்படத்தின் கதாநாயகி மீனாவின் (Meena) பிறந்தநாள். படத்தின் கதாநாயகனான மோகன்லால் (Mohanlal), மீனாவுக்கு இவ்வகையில் வித்தியாசமாக பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அவர் ட்வீட் செய்து, ‘பிறந்த நாள் வாழ்த்துக்கள் மீனா!! திருஷ்யம் 2 செட்டில் உங்களை வரவேற்கிறோம்!!’ என எழுதியுள்ளார்.
Happy Birthday Meena and Welcoming you to the sets of #Drishyam2#HappyBirthdayMeena pic.twitter.com/SBrQnEe1Dx
— Mohanlal (@Mohanlal) September 16, 2020
‘திருஷ்யம்’ (Drishyam) படத்தின் கதைக்களம், வித்தியாசமான திரைக்கதை அமைப்பு ஆகியவற்றால் உந்தப்பட்டு இதை பிற மொழிகளிலும் எடுத்தார்கள்.
ALSO READ: லோகேஷ் கனகராஜ் - கமல்ஹாசன் இணையும் புது படம்....டைட்டில் இதுவா?
இந்தி மொழியில் இது அஜய் தேவ்கன் (Ajay Devgan) நடிப்பில் ‘திருஷ்யம்’ என்ற பெயரிலேயே வெளியானது. தமிழில் கமலஹாசன் (Kamalahasan) நடிப்பில் ‘பாபநாசம்’ (Papanasam) என்ற பெயரில் வெளிவந்தது. இரு மொழிகளிலுமே படங்கள் சாதனை வெற்றியைப் பெற்றன.
மலையாளத்தில் ஜீது ஜோசப் இயக்கியுள்ள ‘திருஷ்யம்’ படம் பார்வையாளர்களிடையே பெரிதும் பிரபலமடைந்தது. மேலும் படத்தின் சீக்வல் ‘திருஷ்யம் 2’ (Drishyam 2) அறிவிக்கப்பட்டபோது, ரசிகர்கள் மேலும் மகிழ்ச்சியடைந்தனர். இப்படத்தின் டைடில் லுக் டீசர் வீடியோவும் ரசிகர்களிடையே நல்ல ஆதரவைப் பெற்றதோடு இப்படத்திற்கான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலங்களில் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்று ‘திருஷ்யம் 2’ (Drishyam 2) என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: விஜய் சேதுபதியின் ‘க/பெ. ரணசிங்கம்’: OTT, DTH தளத்தில் October 2 ரிலீஸ்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR