Beast Update: நடிகர் விஜய்க்கு அம்மாவாகும் செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபு

பீஸ்ட் திரைப்படத்தில் சன் டிவி தொலைகாட்சியின் பிரபல செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபு நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 22, 2021, 12:37 PM IST
Beast Update: நடிகர் விஜய்க்கு அம்மாவாகும் செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபு title=

மும்முரமாக படபிடிப்பு நடந்துக் கொண்டிருக்கும் தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படம் தொடர்பாக லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகர் விஜயின் பீஸ்ட் படத்தில் அம்மா வேடத்தில் பிரபல செய்தி வாசிப்பாளர் நடிப்பதாக செய்திகள் கசிந்துள்ளன.   

விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தில் சன் டிவி தொலைகாட்சியின் பிரபல செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபு நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொலைக்காட்சியில் 17 வருடங்களாக செய்தி வாசிப்பாளராக இருக்கிறார் சுஜாதா பாபு,  தற்போது இவர், விஜயின் அம்மாவாக பீஸ்ட் திரைப்படத்தில் அறிமுகமாகிறார்.  
கும்பகோணம் தீ விபத்தில் பள்ளிக் குழந்தைகள் இறந்த செய்தியை வாசிக்கும்போது கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டு செய்தி வாசித்ததாக ஒரு பேட்டியில் சுஜாதா பாபு கூறியிருந்தார். 

Read Also | ரத்தக்கறையுடன் விஜய்; லீக்கானது பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு வீடியோ

எனவே தளபதியின் அம்மாவாக கலக்குவார் சன் டிவி செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபு என்ற எதிர்பார்ப்புகல் நிலவுகின்றன. சுஜாதா பாபு, ஏற்கனவே ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், இது அவரது முதல் முக்கிய திரைப்படம் என்பதும், தளபதி விஜய்க்கு தாயாக நடிக்கும் பெரிய பட்ஜெட் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் பீஸ்ட் திரைப்படத்தில் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே, யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் செல்வராகவன் ஆகியோர் நடிக்கின்றனர். 

பீஸ்ட் படத்தின் சண்டைக் காட்சிகள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெறும் என்ற எதிர்பார்புகளும் அதிகரித்து வருகின்றன. 

ALSO READ: தளபதி விஜய்யுடன் சேர்ந்து நடிப்பதை வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன் பீஸ்ட் பட நாயகி புகழாரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News