பிக் பாஸில் கலக்கும் ADK; அவரின் மனைவி மற்றும் மகனை பார்த்துளீர்களா?

3 வருடங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ஏ.ஆர் ரகுமான் இசை கச்சேரியில் ADK ராப் பாடல், சிவாஜி படத்தில் இடம்பெற்ற ஸ்டைல் பாடல் ஆகியவற்றை பாடி அரங்கத்தை அதிர வைத்தவர் ஆர்யன் தினேஷ் கனகரத்தினம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 5, 2022, 11:50 AM IST
  • பிக் பாஸ் பிரபலம் ஏடிகேவின் மனைவி.
  • கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து.
  • தற்போது நான்காவது வாரம் சென்று கொண்டு இருக்கிறது.
பிக் பாஸில் கலக்கும் ADK; அவரின் மனைவி மற்றும் மகனை பார்த்துளீர்களா? title=

பிக் பாஸ் சீசன் 6ல் தற்போது 18 போட்டியாளர்கள் உள்ளனர். அதில் ADK என அழைக்கப்படும் ஆர்யன் தினேஷ் கனகரத்தினமும் ஒருவர். ராப் பாடகரான இவர் நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என பன்முகங்களை கொண்டுள்ளார். அதேபோல் இவர் குறும்படங்களையும் இயக்கி நடித்துள்ளார். இதற்கிடையில் பிக் பாஸ் வீட்டில் இவர் சில நெகட்டிவ் மற்றும் பாசிட்டிவ் கொமெண்ட்களை மாறி மாறி பெறுகிறார்.

இந்த நிலையில் தற்போது இங்கு பிக் பாஸ் பிரபலம் ஏடிகேவின் மனைவி மற்றும் மகனின் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. தினேஷ் கனகரத்தினம் ஜேஸ்மின் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர். தற்போது தினேஷ் தன்னுடைய குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் வைரலாகி உள்ளது, மேலும் ரசிகர் பலரும் இவருக்கு இவ்வளவு அழகான குடும்பமா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | இந்தியன் 2வில் களமிறங்கும் யுவராஜ் சிங் தந்தை - புகைப்படம் வைரல்

இதற்கிடையில் தற்போது பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் அசீம் , ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 18 மிஞ்சி உள்ளனர். முன்னதாக ஜிபி முத்து குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். இவரை தொடர்ந்து முதல் எவிக்சனில் மெட்டிஒலி சாந்தி வெளியேறி இருந்தார். பின் கடந்த வாரம் இரண்டாவது எவிக்சனில் அசல் வெளியேறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நான்காவது வாரம் சென்று கொண்டு இருக்கிறது. இந்த வாரம் அசீம், ஆயிஷா, ஷெரினா, கதிரவன் மற்றும் விக்ரமன் எவிக்‌ஷன் லிஸ்ட் இல் சேர்ந்துள்ளது. மேலும் இவர்களில் இப்போது யார் வெளியேறப்போகிறார்கள் என்பதை இன்று மற்றும் நாளைய நிகழ்ச்சியில் தெரிய வரும்.

மேலும் படிக்க | ஆதிபுரூஷ் டீசர் ட்ரோல்களால் நொறுங்கிப்போனேன்; ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த இயக்குநர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News