புது தில்லி: பாலிவுட் நடிகை ஷபானா அஸ்மியின் கார் விபத்துக்குப் பின்னர் கார் டிரைவர் அம்லேஷ் காமத் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை மாலை ஷபனா ஆஸ்மியின் கார் லாரி மீது மோதியது. அதன் பின்னர் லாரி டிரைவர் மற்றும் ஷபானா ஆஸ்மியின் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். இந்தநிலையில் விபத்தில் படுகாயம் அடைந்த நடிகை சபானா ஆஸ்மி விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
69 வயதான நடிகை ஷபானா ஆஸ்மி கடந்த சனிக்கிழமை அன்று மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் இருந்து மும்பை - புனே விரைவு சாலையில் காரில் பயணம் செய்துக்கொண்டு இருந்தார். காலாப்பூர் பகுதியில் சென்றுக்கொண்டு இருக்கும் போது லாரி ஒன்றின் கார் மீது மோதி விபத்திற்கு உள்ளானது. அதில் ஷபானா ஆஸ்மி படுகாயமடைந்தார். தலையில் காயங்கள், கழுத்து, வாய் முதுகெலும்பு, முகம் மற்றும் வலது கண் உள்ளிட்ட பல இடங்களில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
The news of @AzmiShabana Ji’s injury in an accident is distressing. I pray for her quick recovery.
— Narendra Modi (@narendramodi) January 18, 2020
தற்போது ஷபனா ஆஸ்மியின் உல்ட நிலை சீராக உள்ளது. மும்பை மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பிறகு, அனில் கபூர், தபு மற்றும் அனில் அம்பானி உட்பட பல பாலிவுட் பிரபலங்கள் அவரை சந்தித்து ஆறுதல் கூறினார்கள். அதே நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடி உட்பட பலர் ஷபனா ஆஸ்மி விரைவில் குணமடைய வேண்டும் என பிராத்தனை செய்வதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில், சாலை விபத்தில் படுகாயமடைந்த பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மி விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், விபத்தில் ஷபானா ஆஸ்மி சாலை விபத்தில் காயமடைந்துள்ள செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
கலபூரில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில், மும்பை-புனே அதிவேக நெடுஞ்சாலையில் ஓடிய லாரி மீது கார் மோதியதாக டிரக் டிரைவர் சார்பாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எஃப்.ஐ.ஆர் படி, கார் ஓட்டுநரின் அலட்சியம் தான் விபத்துக்கு காரணம் எனத் தெரிகிறது. இந்த கார் விபத்தில் ஷபனா ஆஸ்மிக்கு பலத்த காயம் ஏற்பட்டது, பின்னர் அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், இப்போது அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனைக்கு (கே.டி.ஏ.எச்) மாற்றப்பட்டுள்ளார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.