முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விருமன்'. இப்படத்தின் மூலம் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக அறிமுகமாகிறார். 'கொம்பன்' படத்திற்கு பிறகு முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி இரண்டாவது முறையாக இணையும் படம் 'விருமன்' (Viruman). இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்கிறது.
ALSO READ | 'லிப்லாக்' சாதாரண விஷயமல்ல - மனம் திறந்த இதயராணி!
இப்படத்தை கோடை விடுமுறையை கொண்டாடும் விதத்தில் வெளியிட படக்குழு தீவிரமாக பணிகளை செய்து வருகிறது. நேரடியாக திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் OTT வெளியீட்டு உரிமையை அமேசான் நிறுவனம் வங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் மூலம் அதிதியின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'விருமன்' படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே மற்றொரு முன்னணி நடிகருடன் இணைந்து நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் தகவல்கள் வெளியானது.
திரைத்துறையில் நடிகையாக பயணத்தை ஆரம்பித்தவர் தற்போது பாடகியாக புதிய அவதாரமெடுத்து இருக்கிறார். முறைப்படி சங்கீதம் கற்றுக்கொண்ட இவர் தெலுங்கில் 'கானி' என்ற படத்தில் தான் பாடலை பாடியுள்ளார். கிரண் கோரப்பட்டி இயக்கிய இந்த படத்தில் வருண் தேஜ், உபேந்திரா, ஜெகபதிபாபு, சுனில் ஷெட்டி, நவீன் சந்திரா, நதியா, சாயி மஞ்ரேகர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைப்பில் இந்த படத்தில் 'ரோமியோ ஜூலியட்' என்ற பாடலை பாடியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துகொள்ள நான் நீண்ட நாட்களாக காத்திருந்தேன். என்னுடைய இன்னொரு பெரிய கனவு தற்போது நிறைவேறிவிட்டது, தமன் இசையமைப்பில் நான் பாடலை பாடியுள்ளேன், இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.
MY SINGING DEBUT
Waited so long to share this with you all. Another dream come true. @MusicThaman sir Thank you so much for trusting me and giving me this opportunity. Hope you guys like #ghani #romeojuliet #singingdebut pic.twitter.com/JOboB9VaMM— Aditi Shankar (@AditiShankarofl) February 6, 2022
ALSO READ | பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெளியாகும் படங்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR