ஒருவழியாக வந்தது அப்டேட்... உச்சகட்ட குஷியில் சூர்யா ரசிகர்கள்!

Suriya 42 Update: நீண்ட நாளாக சூர்யா 42 படத்தின் அப்டேட் கேட்டு அவரது ரசிகர்கள் காத்திருந்த நிலையில், படக்குழு அப்டேட் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Apr 6, 2023, 07:06 PM IST
  • சூர்யா இப்படத்தில் 13 கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல்.
  • இப்படம் பான் இந்தியா தயாரிப்பாக உருவாகிகிறது.
  • மேலும், இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார்.
ஒருவழியாக வந்தது அப்டேட்... உச்சகட்ட குஷியில் சூர்யா ரசிகர்கள்! title=

Suriya 42 Update: தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யாவின் நடிப்பில் சமீபகாலமாக வெளிவந்த எதற்கும் துணிந்தவன், ஜெய் பீம், சூரரை போற்று உள்ளிட்ட படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. சூரரை போற்று படத்திற்காக அவர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றிருந்தார். தற்போது பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.  

குறிப்பாக, சூர்யா இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஒப்பந்தமாகியிருந்தார். இந்த படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 42' என்று பெயரிடப்பட்டது. இப்படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். இந்த படத்தின் பிரம்மாண்டமான மோஷன் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. 

மேலும், 3டி தொழில்நுட்பத்தில் தயாராகும் இப்படம் 10 மொழிகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பான் இந்தியா தயாரிப்பில் வெளியாகும் இப்படத்தின் மோஷன் ஒரு பருந்தின் பார்வையில் போர்கள காட்சிகள் காட்டப்பட்டிருந்த நிலையில், சூர்யா கையில் ஆயுதங்கள் உடன் தோற்றமளித்தார்.

மேலும் படிக்க | பேச்சுலர் படத்தில் திவ்யபாரதிக்கு பதில் நடிக்கவேண்டியது இந்த நடிகையா?

மேலும், இத்திரைப்படத்தில், சூர்யா 13 கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. அதையடுத்து, மோஷன் போஸ்டரில் அரத்தர், வெண்காட்டார், மண்டாங்கர், முக்காட்டர், பெருமணத்தார் ஆகிய பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. 

படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பட குறித்து புது அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் பெயர் அறிவிப்பு மற்று ரிலீஸ் தேதியை வரும் ஏப். 16ஆம் தேதி காலை 9.35 மணிக்கு அறிவிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.  

இதனால், நீண்ட நாளாக அப்டேட்டுக்கு காத்திருந்த சூர்யா ரசிகர்களுக்கு, படக்குழு இந்த தகவலை பகிர்ந்துள்ளது. பல்வேறு மொழிகளில் வெளியாகப்போகும் இந்த படத்திற்கு ஒரு பிரபலமான மற்றும் சக்திவாய்ந்த தலைப்பைதான் வைக்க வேண்டும் என எண்ணிய படக்குழு படத்திற்கு 'வீர்' என்கிற பெயரை தேர்வு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அஜித்தை வைத்து சிறுத்தை சிவா இயக்கிய அனைத்து படங்களுமே 'V' என்கிற எழுத்தில் தான் பெயரிடப்பட்டு இருந்தது என்பதால் 'வீர்' என பெயரிடப்படலாம் என கடந்த ஜனவரி மாதம் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஏப்ரல் 7 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் திரைப்படத்தின் மொத்த பட்டியல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News