லோகேஷ் யூனிவெர்சில் பார்கவ்? கலாய் வாங்கிய சாந்தனு!

கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் கைதி படத்தின் தொடர்ச்சியாக நடைபெறும் கதையாக அமைக்கப்பட்டு இருந்தது.  

Written by - RK Spark | Last Updated : Jun 9, 2022, 07:58 AM IST
  • விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
  • உலகம் முழுவதும் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
  • அடுத்ததாக விஜய்யை வைத்து படம் இயக்க உள்ளார்.
லோகேஷ் யூனிவெர்சில் பார்கவ்? கலாய் வாங்கிய சாந்தனு! title=

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. கமல்ஹாசனின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவிற்கு இப்படத்திற்கு மிகப்பெரிய வசூல் மழை பொழிந்து வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 200 கோடிக்கு மேல் விக்ரம் படம் வசூல் செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழ் சினிமாவில் இந்த வருடம் அதிக வசூல் செய்த படங்களில் விக்ரம் படம் முதலிடத்தில் இருக்கும் என்பது சந்தேகமே இல்லை. 

மேலும் படிக்க | அதிக சம்பளம் பெறும் நடிகைகள்- நயன்தாராவை முந்திய பூஜா ஹெக்டே?!

விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ்க்கு 80 லட்சம் மதிப்புள்ள காரை பரிசாக வழங்கினார்.  மேலும் படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்களுக்கு விலையுயர்ந்த பைக், நடிகர் சூர்யாவிற்கு விலை உயர்ந்த ரோலக்ஸ் வாட்ச் பரிசாக வழங்கினார்.  இந்நிலையில் நேற்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் #ASKLokesh என்ற ஹாஸ்டேக் மூலம் ரசிகர்களிடம் கேள்விகளை கேட்க சொன்னார். இதில் பலர் தங்களுடைய கேள்விகளை லோகேஷ் கனகராஜிடம் முன்வைத்தனர். 

 

 

அதில் நடிகர் சாந்தனு மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற தன்னுடைய கதாபாத்திரம் உங்களது மல்டிவெர்சில் மீண்டும் வருமா என்று ஜாலியாக கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த லோகேஷ் "பார்கவ் செத்துட்டான்" என்று அவரும் கலாய்க்கும் விதமாக பதிவிட்டிருந்தார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விக்ரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி 67 படத்தை இயக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | சூர்யாவுக்கு நேரில் சென்று சர்பிரைஸ் கிஃப்ட் கொடுத்த கமல்ஹாசன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News