தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘இதயம்’ சீரியல்.
இதயம் : இன்றைய எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இந்த கல்யாணத்தில் ஆதி வீட்டில் இருப்பவர்களுக்கு விருப்பம் இல்ல, இதனால் இந்த கல்யாணம் வேண்டாம் என்று பாரதி முடிவு செய்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கண் கலங்கும் பாரதி
அதாவது, பாரதி இந்த கல்யாணமே வேண்டாம் மாமா, ஆதிக்கு நம்மை புரிந்து கொள்பவர் தான், ஆனால் ஆதியால் 24 மணி நேரமும் கூடவே இருக்க முடியாதே, நாம கிளம்பிடலாம் மாமா என்று சொல்லி கண் கலங்க அங்கிருந்து கிளம்பி வரும் இவர்கள் வேறொரு இடத்திற்கு வந்து தங்குகின்றனர்.
பாரதி குடும்பத்தினர் கிளம்பிய விஷயம் அறிந்து அறிவு, ஸ்வேதா ஆகியோர் சந்தோசம் அடைகின்றனர், மறுபக்கம் பாரதி ஆதியுடனான நினைவுகளை நினைத்து பார்த்து கண் கலங்கியவாறு இருக்கிறாள். ஆதி பாரதிக்கு தொடர்ந்து போன் செய்ய அவள் போனை எடுக்காமல் இருக்கிறாள்.
மேலும் படிக்க | வின்னர் படத்தில் வடிவேலுவுக்கு பதில் நடிக்க வேண்டியவர்! அட, இந்த நடிகரா..
பாரதியை பார்க்க போகும் ஆதி
இதனால் ஆதி பாரதியை பார்க்க கிளம்ப சாரதாவும் மற்ற குடும்பத்தினரும் அவங்க எல்லாரும் வந்துட்டாங்க, காப்பு கட்டிய பிறகு நீ வெளியே போக கூடாது என்று தடுத்து நிறுத்த மேலே வந்த ஆதி யாருக்கும் தெரியாமல் சுவர் ஏறி குதித்து பாரதி குடும்பத்தை தங்க வைக்க ஏற்பாடு செய்திருந்த வீட்டில் வந்து பார்க்க யாரும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைகிறான். வேலைக்கார பெண்ணிடம் இது குறித்து விசாரிக்க யாரும் வரலையே சார், அம்மாவுக்கு கூட இந்த விஷயம் தெரியும் என்று சொல்ல ஆதி எங்க போனாங்க, என்ன ஆனாங்க என்று தெரியாமல் கன்பியூஸ் ஆகிறான். இங்கே பாரதி ஆதியை நினைத்து வருத்தத்தோடு பேசி புலம்பி கொண்டிருக்க தமிழ் யாருக்கும் தெரியாமல் தாங்கள் இருக்கும் லொகேஷனை ஆதிக்கு அனுப்பி வைக்கிறாள்.
காணத்தவறாதீர்கள்
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இதயம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
இதயம்: சீரியலை எங்கு பார்ப்பது?
இதயம் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
மேலும் படிக்க | உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள சாக்ஷி அகர்வால் செய்யும் விஷயம்! அட..இவ்வளவுதானா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ